×
 

இன்ஸ்டா மூலம் பழக்கம்.. திருப்பூர் லாட்ஜில் கஞ்சா பார்ட்டி.. அலேக்காக தூக்கிய போலீஸ்..!

திருப்பூரில் தனியார் லாட்ஜில் கஞ்சா பார்ட்டி நடத்தி கஞ்சா போதையில் மிதந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் போதைப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். கஞ்சா போன்ற போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பிற மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் அவை பிரிக்கப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனைக்காக பிரித்து எடுத்து செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து, திருப்பூரில் கஞ்சா பார்ட்டி நடத்திருப்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக கஞ்சா புகைப்பவர்கள், கஞ்சா வைத்திருப்பவர்களை போலீசார் கண்டுபிடித்து களை எடுக்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா புகைப்பவர்களை நண்பர்களாக சேர்த்துக் கொண்டு கஞ்சா பார்ட்டி நடத்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்.. தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு.. கஞ்சா இளைஞர்கள் வெறிச்செயல்..!

திருப்பூர், பி.என். ரோடு பிச்சம்பாளையத்தில் தனியார் லாட்ஜ் ஒன்று செயல்படுகிறது. இங்கு ஆந்திராவை சேர்ந்த நபர் உட்பட 6 பேர் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் தங்களது அறையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல லாட்ஜ் பணியாளர்களுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது.

எனவே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் லாட்ஜ்க்கு விரைந்து வந்த போலீசார், லாட்ஜில் உள்ள அறைகள் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த நிலையில் அதில் அறை ஒன்றில் அதில், தேனியை சேர்ந்த சுமன் (வயது 25), ஆந்திரா, விஜயவாடாவை சேர்ந்த புட்டராஜ் (வயது 25), சேக் காலிஜித் (வயது 20), திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த நவீன்குமார்(வயது 21), தேனியை சேர்ந்த சகோதரர்கள் நந்தன் (வயது 22) மற்றும் சரவணன்(வயது 20) ஆகியோர் இருந்துள்ளனர். 

அந்த அறையில் போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த அனுப்பர்பாளையம் போலீசார், நான்கு கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. 6 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக மாறி உள்ளனர். சுமனும், ஆந்திராவை சேர்ந்த இருவரும் இன்ஸ்டாகிராம் வாயிலாக நண்பர்கள் ஆகியுள்ளனர். அடிக்கடி கஞ்சா குறித்த ரீல்ஸ், போஸ்ட்டுகளை இவர்கள் பகிர்ந்துள்ளனர்.

இதையடுத்து இவர்களுடன் மற்ற 4 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு 6 பேரும் நண்பர்களாக மாறி உள்ளனர். ஒரு நாள் கஞ்சா பார்ட்டி நடத்தி நாள் முழுவதும் கஞ்சா போதையில் திளைக்க முடிவு செய்த நண்பர்கள் திருப்பூரில் லாட்ஜ் எடுத்து கஞ்சா புகைக்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கஞ்சா பொட்டலத்தை கொண்டு வருமாறு ஆந்திராவை சேர்ந்த இருவரிடம் சுமன் கூறியுள்ளார்.  

இதனயடுத்து ஆந்திராவில் இருந்து  புட்டராஜ், சேக் காலிஜித் இருவரும் கஞ்சாவை தமிழகத்திற்குள் கடத்தி வந்தனர். மேலும் 'இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கமான தேனியை சேர்ந்த சகோதரர்களையும், வெள்ளியங்காட்டை சேர்ந்த நவீன்குமாரையும் சுமன் கஞ்சா பயன்படுத்த அழைத்துள்ளார். 6 பேரும் கஞ்சா புகைத்த நிலையில் போலீசார் சோதனையில் சிக்கியது தெரியவந்துள்ளது.
 

இதையும் படிங்க: திருப்பூரில் 3 லட்சம் பேர் பாதிப்பு..! கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் நெசவாளர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share