×
 

ஆம் ஆத்மி கட்சிக்குள் புகைச்சலா?.. மாற்றப்படுகிறாரா பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்.. அரவிந்த கெஜ்ரிவால் எடுக்கப் போகும் முடிவு என்ன?

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர் தலைநகர் அரசியல் நோக்கர்கள்.

70 தொகுதிகளை உள்ளடக்கிய டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 8-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. வெறும் 22 இடங்களை மட்டுமே பிடித்த ஆம் ஆத்மி ஆட்சியை பறிகொடுத்தது. அக்கட்சியின் நிறுவனரான அரவிந்த் கெஜ்ரிவாலே நியூடெல்லி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

டெல்லியில் தான் இந்த நிலை என்றால், பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சியை பஞ்சாயத்தை எதிர்கொண்டு வருகிறது. அங்கு கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் மாநிலமெங்கும் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. கட்சிக்குள்ளேயே முதலமைச்சர் பகவந்த் மானுக்கு எதிராக கலகக் குரல்களும் கேட்கத் தொடங்கி விட்டன. முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் முழக்கங்கள் கேட்கிறது. 

இந்நிலையில் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்ட பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளுக்கு இன்று டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.  இக்கூட்டத்தில் பஞ்சாப் அரசியல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் 93 இடங்களுடன் ஆம் ஆத்மி ஆளுங்கட்சியாக இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: தேசத்திற்கான பின்னடைவு..! இந்தியா கூட்டணியே விழித்துக் கொள்..! அலறும் திருமா

இந்நிலையில் டெல்லியைப் போன்றே பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கும் என்று பாஜக மூத்த தலைவர் தருண் சிங் ஆரூடம் கூறியுள்ளார். ஆம் ஆத்மியின் 30 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

5 நாட்களுக்கு முன்புவரை அசைக்க முடியாத கட்சியாக காட்சியளித்த ஆம் ஆத்மி இன்று கலகலத்து போயுள்ளது அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து பகவந்த் மான் மாற்றப்படுவாரா? அரவிந்த் கெஜ்ரிவால் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பொறுத்தே ஆம் ஆத்மியின் அரசியல் எதிர்காலம் கணிக்கப்படும் என்று கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.
 

இதையும் படிங்க: டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share