வெளியானது ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்".. ஃபர்ஸ்ட் சிங்கிளை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம்..!
ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
இந்திய திரையுலகில் கண்ணழகி என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒரே ஹீரோயின் "ஐஸ்வர்யாராய்" மட்டுமே.. ஆனால் ஆண்களில் கண்களை வைத்து ஒருவரை மயக்க முடியும் என்றால் அது "ஆரியாவை" தவிர வேறு யாராலும் முடியாது. இயக்குநர் பாலா முதல் அனைவரும் ஆர்யாவை பார்த்து வியந்த ஒரே ஒரு விஷயம் அவருடைய கண்கள் மட்டுமே. அந்தக் கண்களுக்காகவே அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா.
கேரளாவைச் சேர்ந்த ஆர்யாவின் உண்மையான பெயர் "ஜம்ஷத் சேதிராகத்". 2005ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான "அறிந்தும் அறியாமலும்" திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், உள்ளிட்ட பல படங்களை நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: காமெடி நடிகரை காத்திருந்து தூக்கிய போலீஸார்..!
இதில் நடிகர் ஆர்யாவுக்கு மிகப்பெரிய புகழை கொடுத்த படம் என்றால், அது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவான "ராஜா ராணி" திரைப்படம். இந்த திரைப்படத்தில் "முதல் காதல் தோற்றுப் போனாலும் தனக்கென பிடித்த வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்வதுதான் உலகத்தின் நியதி... அந்த வாழ்க்கை உங்களுக்கு எப்பொழுது பிடிக்கிறதோ அப்பொழுது ஆரம்பித்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக வாழ்க்கை அழகாக இருக்கும்" என்ற கருத்தை உணர்த்தும் விதமாக இந்த படம் அமைந்திருக்கும். மேலும், அஜித்துடன் நடித்த "ஆரம்பம்" திரைப்படத்தில் ஹேக்கிங் செய்யக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்து, அஜித்தை தவிர்த்து ஆர்யாவை மக்கள் பார்க்கும் அளவிற்கு நடித்து அசத்தியிருப்பார்.
இப்படியிருக்க,இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான "அறிந்தும் அறியாமலும்" என்ற படத்தில் நடித்த ஆர்யாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது" கிடைத்தது. அதேபோல் "நான் கடவுள்" படத்திற்கு "சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம் பேர் விருதும், சிறந்த நடிகருக்கான விஜய் விருதும் கிடைத்தது.
இந்த நிலையில், தற்பொழுது சந்தானத்தை வைத்து ஆர்யா படத்தை தயாரித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் தற்பொழுது மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடித்தும் முடித்து உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குனரான மனு ஆனந்த் இயக்கத்தில், திபு நிபுணன் தாமஸ் இசையில், ஆர்யா கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த "மிஸ்டர் எக்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரகசிய ராணுவ வீரர்களாக நடிக்கும் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும், ரகசிய ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்ளும் கதையாக இப்படம் உருவாகி உள்ளது என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது.மேலும் கிருத்திகா நெல்சன் எழுத்தில் கபில் கபிலன் பாடிய "ஹைய்யோடி" பாடலும் வெளியாகி உள்ளது.
இதனால் இப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளியாவதற்கு முன்பே சிக்கலை எதிர்கொள்ளும் Bad Girl.. சென்சார் போர்டு சொன்ன தகவல் இதுதான்..!