×
 

போலீஸ் பிடியில் தமன்னா,காஜல் அகர்வால்...பல கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய பின்னணி..!

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் சிக்கி உள்ளனர் பிரபல நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வால்.

கிரிப்டோ கரன்சி மோசடிகள் அதிகரித்து வரக்கூடிய இந்த சூழலில், தமிழக அரசும், காவல்துறையினரும் இணைந்து, இணையவழி மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பண ஆசை உள்ளவர்கள், இதில் எப்படியோ சிக்கிக் கொள்கின்றனர். ஒவ்வொரு முறையும் பணத்தை இழந்தவர்கள் காவல்துறையினரின் முன்பாக கதறி அழும் காட்சிகள் நம் நெஞ்சை உருவுக்குவதாக இருக்கிறது.

அதிலும், மக்களை பெரிதும் ஏமாற்றுவதற்காக, இப்படிப்பட்ட மோசடி கும்பல் பல சினிமா பிரபலங்களை பயன்படுத்தி வருகிறது. சில பிரபலங்கள் இது போன்ற காரியங்களுக்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், ஒரு சில பிரபலங்கள் பணத்திற்காக, என்ன விளம்பரம் என்று கூட முறையாக விசாரிக்காமல் நடித்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். மக்கள் என்று இணையதளத்தில் மூழ்க ஆரம்பித்தனரோ அன்றே ஆன்லைன் மோசடிகளும் ஆரம்பம் ஆகிவிட்டது. 

இதையும் படிங்க: சீமானுக்கு பெரியார் தேவைப்படுகிறார்... நறுக்கென்று பதிலளித்த ஆர். பார்த்திபன்!

அந்த வரிசையில் இன்று புதுசேரியை சேர்ந்த நபர்கள் சிக்கியுள்ளனர். கிரிப்டோகரன்சில் முதலீடு செய்தால் அதிக லாபத்தை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் இதுவரை ரூ.2 கோடியே 40 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பணம் இழந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்க, தைரியமாக புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் மோசடி தொடர்பாக புகார் ஒன்றை காவல்துறையினரிடம் அளித்து உள்ளார். இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிரிப்டோ கரன்சி மோசடி செய்யக்கூடிய இந்த கும்பல் கோயம்பத்தூரை தலைமை இடமாக வைத்து மோசடிகளை ஆரம்பித்து உள்ளது. இந்த சூழலில் அக்கும்பல் மக்களை ஏமாற்றுவதற்கு நடிகைகளை பகடைக்காயாய் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. சதுரங்க வேட்டை திரைப்படத்தின் பாணியில் நடந்து உள்ள இந்த மோசடியை சற்று விரிவாக பார்த்தால், கடந்த 2002-ல் மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் "காஜல் அகர்வால்" வைத்து முதல் பூஜையை ஆரம்பித்து உள்ளனர். இதில் மோசடி கும்பலின் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு  ரூ.1 கோடி முதல் ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான கார்களை நடிகையை வைத்து பரிசாக வழங்கியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் மும்பையில் தனியார் கப்பலை வாடகைக்கு எடுத்து ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி அவர்களிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளன. அக்கப்பலில் நடிகை தமன்னாவை சிறப்பு விருந்தினராக வரவழைத்து, பல பிரபலங்களிடம் இருந்தும் பண மோசடிகள் நடைபெற்று உள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரி பகுதியில் மட்டும் இந்த கும்பல் ரூபாய் 3 கோடி அளவிற்கு ஏமாற்றி உள்ளதாகவும், அந்த கும்பலை பிடிக்க டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, மும்பை, கோயம்புத்தூர், பெங்களூர், பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேஷ், கேரளா, விழுப்புரம், திருப்பூர் போன்ற இடங்களிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். காரணம், துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால் இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகித்து வருகின்றனர்.

பணத்திற்காக விளம்பரத்தில் நடிக்கச் சென்ற நடிகைகள் இன்று அந்தப் பணத்திற்கே பொறுப்பாக மாறுவார்கள் என்று தெரியாமல் போனதை நினைத்து, தற்பொழுது வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றன.

இதையும் படிங்க: முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: காமெடி நடிகரை காத்திருந்து தூக்கிய போலீஸார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share