×
 

"அழகோ அழகு அவள் கண் அழகு".. போட்டோக்களில் மனதை கொள்ளை கொள்ளும் மிருணாளினி ரவி ...!

நடிகை மிருணாளினி ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் கவர்ச்சி கண்ணழகி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை மிருணாளினி ரவி. இவர் நடிப்பு அபாரமாக இருந்தாலும் பார்ப்பவர்களை வசியம் செய்வது போல் இருப்பது  இவரது கண்கள். அப்படி ஒரு கவர்ச்சி முகமுடையவர். அதிகமாக மிருணாளினி ரவியை எங்கும் பார்க்க முடியாது.ஆனால் எப்பொழுதும் இன்ஸ்டாவில் ஆக்டிவியாக இருப்பதை பார்க்க முடியும். நடிப்பு பிஸி ஒருபுறம் இருந்தாலும், போட்டோ ஷுட்டுக்கு என்றுமே லீவு விடமாட்டார்.அந்த அளவிற்கு இவரது போட்டோ இணையத்தில் கொட்டி இருக்கும்.   

இப்படிப்பட்ட மிருணாளினி ரவி , டப்ஸ்மேஷ் மூலமாக பிரபலமானவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும், இவரது ரீல்சால் பெரிதும் கவரப்பட்ட  இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்து, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக்கினார். பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய 'சாம்பியன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதையும் படிங்க: ஹாரர் பாத்தாச்சு... அடுத்து திரில்லர் தான் அதுவும் ஹாலிவுட்டில் தான்..! கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் செல்லும் நடிகை..!

இதுவரை சூப்பர் டீலக்ஸ், கடலக்கொண்ட கணேஷ், சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ,கோப்ரா போன்ற படங்களில் நடித்து உள்ளார். ஆனால் இத்தனைப்படங்களை பார்க்கிலும் ரோமியோ திரைப்படம் மிருணாளினிக்கு ரசிகர்களை மேலும் அதிகரிக்க உறுதுணையாக இருந்தது. 

அப்படத்தின் கதையில் "திரை உலகில் கதாநாயகியாக ஆசைப்படும் மிருணாளினிக்கு பெற்றோர்களால் கட்டாய கல்யாணம் நடைபெறும், இதில் அவரது ஆசையை புரிந்து கொண்ட விஜய் ஆண்டனி அவருக்காக படத்தை தயாரிக்க முன்வந்து தானும் அவருடன் நடித்து தனது காதலை புரிய வைப்பார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தாலும் அதில் கல்யாண பெண்ணின் சேரியில் இருந்து மார்டன் உடையில் மாறி வந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார். அந்த காட்சி தான் இவருக்கு ரசிகர்களை பெரிதும் உண்டாக்கியது. 

இப்படி இருக்க, ஆரஞ்சு கலர் சேலையில், கடற்கரையில் இருப்பதை போன்ற பின்னணி சித்திரத்தில் தனது அழகை மொத்தமாக வெளிக்காட்டி போட்டோ ஷுட்டை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு உள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு அழகே கண்ணுதானே  மிருணாளினி.. எத மறைக்கனுமோ அதை மறைக்காம எதை நாங்க ரசிக்கிறோமோ அந்த கண்களை மறச்சிட்டிங்களே மிருணாளினி... என சந்தோஷத்தில் கொஞ்சம் வேதனை அடைந்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: ஹனிமூன் வைஃப் போட்டோ... கிளாமரில் ஹார்ட் டச் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்...! ரசிகர்கள் ஆரவாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share