×
 

நீட் தேர்வை ரத்து செஞ்சா தான் பாஜகவோட கூட்டணி-னு சொல்ல முடியுமா..? இபிஎஸ்க்கு சவால் விட்ட அமைச்சர்..!

தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜ்கவுடன் கூட்டணி என்று கூற முடியுமா என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், எம்பி தம்பிதுரை உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமையும், மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வரும் என அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இது அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.

இதையும் படிங்க: “ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்” - மத்திய அரசுக்கு மண்ணள்ளி வீசாத குறையாக சாபம் விட்ட தங்கம்...! 

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார். தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தது இருந்ததாகவும், அதே உறுதியை ராகுல்காந்தி அளித்ததாகவும் கூறினார். டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க செல்லவில்லை என கூறிவிட்டு அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததாக கூறினார்.

பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா மீண்டும் கூறி இருப்பதாகவும், தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. தப்புக் கணக்கு போடுவதாக கூறிய தங்கம் தென்னரசுக்கு எஸ்.பி. வேலுமணி பதிலடி,!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share