அதிமுக ஆட்சி குறித்து பொய் கருத்தை பரப்புகிறார் சேகர்பாபு..! சட்டசபையில் அதிமுக அமளி..!
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன் வெளி நடப்புச் செய்தனர்.
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சேகர்பாபு பதிலுரை அளித்து பேசினார். அப்போது, அறநிலையத்துறையை அறமாக வழிநடத்த தெரிந்த முதலமைச்சர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் என கூறினார்.. தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால் அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்கு தான் கிடைக்கும் என தெரிவித்தார்.
மடாதிபதிகளே மாடத்தில் இருந்து பேரவையை வாழ்த்தும் காட்சி திராவிட மாடல் ஆட்சியில் தான் நடக்கும் என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த ஆட்சியில், 800க்கும் மேற்பட்ட அம்மன் திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாக தெரிவித்தார். நூறு ஆண்டுகளுக்கு மேல் உள்ள பல்வேறு கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் மூவாயிரத்திற்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் என கூறினார். தமிழக முழுவதும் இதுவரை 2,820 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகவும், இதுவரை கோவில் திருப்பணிக்கு 1320 கோடி நன்கொடையாக வந்துள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: செல்வப்பெருந்தகையுடன் கூட்டு..? சவுக்கு மேட்டரின் பரபரப்பு ஆடியோ..! சேகர்பாபுவிடம் பேசிய ரௌடி எங்கே..?
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலுரை அளித்து பேசிய போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் எதுவும் நடக்கவில்லை என தவறான தகவலை அமைச்சர் பதிவு செய்வதாக ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியிருக்கிறார். துறையின் அமைச்சரான நான் தவறான தகவலை பதிவு செய்யவில்லை என அமைச்சர் சேகர் பாபு அதற்கு பதில் அளித்துள்ளார். சேகர் பாபுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு..! எங்க தலைவர் அத சொல்லல.. மறுக்கும் சேகர்பாபு..!