பொன்முடி போட்டோவிற்கு செருப்பு மாலை... பெண்களின் செயலால் பீதியான திமுக..!
ஓசூர் மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு நடைபெறுவதாக கூறி அதிமுகாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அமைச்சர் பொன்முடியின் உருவப்படத்திற்கு காலணிகளை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அடிப்படை வசதிகளை செய்த தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ராயக்கோட்டை சாலை மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார், இதில் சிறப்பு அழைப்பாளராக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது குண்டு குழியுமாக உள்ள சாலையை சீர்படுத்த வேண்டும் முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், மாநகராட்சிக்கு நிரந்தரமாக ஆனையாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பெண்கள் உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவி விலக வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்ததால் பரபரப்பு நிலவியது. விலைமாது வீட்டில் சைவமா வைணவா எனப்பேசியதற்காக கடும் கண்டனங்களை எதிர்க்கொண்டார் அமைச்சர் பொன்முடி. இதனால் கடுப்பான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியின் திமுக துணைச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் முதலிடம் அதிமுக - பாஜக கூட்டணி.. இரண்டாமிடம் விஜய்.. தமிழிசை தாறுமாறு கணிப்பு.!!
''தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுக மகளிர் அணியினர் பொன்முடியின் இந்த பேச்சைக் கண்டித்து அவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்ததோடு, செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அம்பேத்கரே காவிதான்... திமுகவை திக.,காரன் சுரண்டி திங்கிறான்.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்..!