தங்கையுடன் பூட்டி வைத்து உல்லாசம்: அக்கா நெற்றியில் வழிந்த ரத்தம்... மனம் மாறிய இன்ஸ்பெக்டர்..!
ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிறகு பின்னர் இன்ஸ்பெக்டர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
'உன்னை எனக்குப் பிடிக்கும், ராதா ராணி கோவிலுக்குப் போகலாம்... திருமணம் செய்து கொள்ளலாம் வா...' என்று ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிறகு பின்னர் இன்ஸ்பெக்டர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
ராஜஸ்தானின், பரத்பூரில் காவல்துறை அதிகாரி ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, பின்னர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில், கும்ஹெரின் அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், காவல்துறை அதிகாரி அவரது நண்பருடன் சேர்ந்து, தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய்யான வழக்கில் சிறைக்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இன்ஸ்பெக்டரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்.. சாட்சி சொல்ல வர முடியாதா என கேள்வி..!
பாதிக்கப்பட்ட பெண் தனது துயரத்தை கூறுகையில், “நான் அல்வாரில் உள்ள ஆரவலி விஹாரில் வசிப்பவள். 2022 ஆம் ஆண்டில், மகேந்திர சிங் ரதி கும்ஹேரில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் எனக்கும், என் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வழக்கு தொடர்பாக மகேந்திர ரதியைச் சந்தித்தேன். அவர் என் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டார். பின்னர் அவர் என்னை அழைக்க ஆரம்பித்தார்.
ஒருமுறை நான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மகேந்திர ரதி நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். நான் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது, அவர், ''வா, நான் உன்னை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுகிறேன்'' என்றார். அவரை நம்பி, நான் அவருடைய காரில் அமர்ந்தேன். ஆனால் அவர் என்னை வேறு எங்கேயோ அழைத்துச் செல்லத் தொடங்கினார். இந்த சாலை பேருந்து நிலையத்திற்குச் செல்லாது என்று நான் சொன்னேன். அதற்கு மகேந்திரன், ''நாம் என்னுடைய குடியிருப்புக்குப் போகிறோம். நான் அங்கே தண்ணி குடிச்சிட்டு உன்னை பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடுவேன்'' என்றார்.
மகேந்திரா என்னை அரசு குடியிருப்பில் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் என்னை காதலிப்பதாகவும், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். அவர் உன்னை எனக்குப் பிடிக்கும்னு சொன்னார். ''நீ நம்பவில்லை என்றால் பர்சானாவில் உள்ள ராதா ராணி கோவிலுக்கு வா...'' என அவர் என்னை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் தன் கட்டை விரலைக் கல்லில் தேய்க்க ஆரம்பித்தார். ''என் காதல் இரத்தத்தால் நிறைந்தது'' என்றார்.
நான் வீட்டிற்குச் சென்று என் சகோதரனிடம் இதைச் சொன்னபோது, அவர் இந்த உறவை நாங்கள் ஏற்கவில்லை என்று கூறினார். அப்போது மகேந்திரன் என்னுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்வதாகக் கூறினார். பின்னர் என் வீட்டிற்குவந்து என்னுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இதற்குப் பிறகு மகேந்திரா என்னுடன் தொடர்ந்து உடல் ரீதியான உறவு வைத்திருந்தார். ஒரு முறை இதெல்லாம் திருமணத்திற்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று நான் அவரிடம் சொன்னபோது, என்னையும், என் தங்கையையும் ஒரு அறையில் பூட்டி வைத்தார். பின்னர் அவர் என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டார். பின்னர் 2024 ஆம் ஆண்டில், மகேந்திரா திருமணத்தில் இருந்து பின்வாங்கினார். இதை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அவர் என்னையும், என் சகோதரியையும், என் சகோதரனையும் பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பினார்.
இதில், மகேந்திராவின் நண்பர் பவன் சௌபேயும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். இப்போது நாங்கள் மிகவும் சிரமப்பட்டு சிறையில் இருந்து மீண்டுள்ளோம். அதனால் மகேந்திரா தனது செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னடா இது சீனாக்காரனுக்கு வந்த சோதனை..? குடும்பம் நடத்த பெண் கிடைக்காமல் நாயாய் அலையும் ஆண்கள்..!