இராணுவ விமானம் வெடித்து பயங்கர விபத்து..! 46 பேர் உயிரிழந்த சோகம்..!
சூடானில் இராணுவ விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூடானில் ராணுவ விமான விழுந்து ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ஓம்துர்மான் நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் வானில் பறந்துள்ளது.
இதையும் படிங்க: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா! தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு...!
ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் மேல் இந்த விமானம் மோதி வெடித்து பயங்கர விபத்துக்குள்ளானது.இந்த விபத்துக்கான காரணம் குறித்து சரியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
இதனிடையே, இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஒரே அணியில்...தாய் வழி வந்த தங்கங்கள்...போஸ்டரால் பரபரப்பு