×
 

‘2000 டன் செம்மரம் விற்று முதல்வரையே மாத்தணும்...’ நீச்சல் குளத்தில் சூ சூ போன அல்லு அர்ஜூன்... புஷ்பாவுக்கு மீண்டும் சிக்கல்..!

புஷ்பா-2 படத்தின் கதையை வைத்தே நடவடிக்கை எடுத்த முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக ஃபயர் கிளப்பி வருகிறார்கள் அல்லு அர்ஜூனின் அடிப்பொடிகள்.

‘‘அல்லு அர்ஜூன் - புஷ்பா யாருனு அவனுக்கு தெரியனும்..? என்ன செய்ய போற..? 2000 டன் செம்மரத்தை கடத்தி வித்து, அந்த பணத்துல என்னைய அசிங்ப்படுத்துன அந்த முதலமைச்சர காலி பண்ணி வேற ஒருத்தன முதலமைச்சர் ஆக்கப்போறேன்... புஷ்பான்னா ப்ளவர் இல்லடா... வோல்டு வைடு ஃபயர்டா...’’ என புஷ்பா-2 படத்தின் கதையை வைத்தே நடவடிக்கை எடுத்த முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக ஃபயர் கிளப்பி வருகிறார்கள் அல்லு அர்ஜூனின் அடிப்பொடிகள்.

‘‘அல்லு அர்ஜூன் படத்திலயே பிடிக்காத ஒரு படம் என்றால் புஷ்பா-2 வாகத் தான் இருக்கும். கடத்தல் தொழில் பண்றவன் ஹீரோ. அதை தடுக்க நினைக்கும் போலீஸ் வில்லன் என்ன கொடுமை புஷ்பா இது?’’ என முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆதரவாளர்கள் படத்தை பிரித்து மேந்து வருகிறார்கள்.

 அதில் ஒரு காட்சி புஷ்பா 2 படத்தில்  நீச்சல் குளத்தில் ச்சூ... ச்சூ காட்சியால்  மீண்டும் சிக்கலில் இருக்கிறார் அல்லு அர்ஜூன். புஷ்பா- 2 படம் நாடு முழுவதும் ரூ1000 கோடிக்கும் மேல் வசூழை குவித்து வரும் நிலையில், அந்தப் படத்தின் அக்கட தேசத்து ஹீரோ அல்லு அர்ஜுன் மீது தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது.

இதையும் படிங்க: பெரியாரும் வேண்டும்..பெருமாளும் வேண்டும் ..புது ரூட்டில் துரை.வைகோ..!

இப்போது மீண்டும் அல்லு அர்ஜூனுக்கு ஷாக் கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சி நிர்வாகி. இயக்குனர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜுன், தயாரிப்பு குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா எம்எல்சியுமான தென்மர் மல்லன்னா புகார் அளித்துள்ளார்.

‘புஷ்பா 2’ படத்தில் போலீஸ் அதிகாரி முன்னிலையில் நீச்சல் குளத்தில் ‘புஷ்பா’ சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிக்கு தென்மர் மல்லண்ணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இந்த காட்சி சட்ட அமலாக்க அதிகாரிகளின் கண்ணியத்தை அவமதிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். அவர் அளித்த புகாரில், படத்தின் இயக்குநர் சுகுமார், ஹீரோ அல்லு அர்ஜூன், படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஆட்சேபகரமான முறையில் போலீஸ் கதாபாத்திரங்களை படமாக்குவதை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார் அல்லு அர்ஜூன் இன்று காலை 11 மணிக்கு இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அல்லு அர்ஜுனுக்கு மாநில காவல்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா- 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தெலுங்கானா அரசு, அல்லு அர்ஜுனை கைது செய்த விவகாரம் நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையிலும் பல்வேறு நிர்வாகக் காரணங்களைக் காட்டி அல்லு அர்ஜுன் ஒரு இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் டோலிவுட் மட்டுமன்றி இந்திய திரை பிரபலங்கள் பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக களமிறங்கினர். இதையடுத்து சிறையில் இருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜுனை குடும்ப பிரச்சனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு சிரஞ்சீவி குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் சென்று சந்தித்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் சட்டசபையில் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனுக்கு கால், கண் அல்லது சிறுநீரக இழப்பு ஏற்பட்டதா? ஏன் இவ்வளவு பேர் அவரைச் சந்தித்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

ரேவந்த் ரெட்டியின் இந்த கேள்வி திரையுலகினரையும் தாண்டி அரசியல் கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியான பாஜக பேசிவரும் நிலையில் ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சு சொந்த கட்சியினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி வெளியான சந்தியா தியேட்டர் சம்பவத்தில் தொடர்புடைய முதல் 10 குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் அல்லு அர்ஜுன் மீது, ரேவந்த் ரெட்டி தீவிரம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் பேசப்படும் அல்லு அர்ஜுனை கைது செய்வதன் மூலம் அகில இந்திய அளவில் பேசப்படும் அரசியல் தலைவராக ரேவந்த் ரெட்டி தன்னை முன்னிலைப் படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் மீதான முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அடக்குமுறைக்கு பாஜகவை சேர்ந்த கிஷன் ரெட்டி, புரந்தேஸ்வரி போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் ரேவந்த் ரெட்டிக்கு முழு ஆதரவை தருவதாக ஆந்திராவின் மற்றொரு பாஜக எம்எல்ஏ விஷ்ணு குமார் ராஜு தெரிவித்துள்ளார். சினிமாக்காரணுக்கு சினிமாக்காரன் ஆதரவு தெரிவிக்கும்போது, அரசியல்வாதிக்கு அரசியல்வாதிதான் சப்போர்ட் பண்ணணும் என்கிற ரீதியில் ஆதரவு தெரிவித்துள்ளார் பாஜகவை சேர்ந்த விஷ்ணு குமார் ராஜூ.

செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணுகுமார் ராஜு, “என்னுடைய கருத்துப்படி, இதுபோன்ற சினிமா நிகழ்ச்சி கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். இந்த மாதிரி நிகழ்சிகளால் யாருக்கு என்ன பயன்? 300 விலையுள்ள டிக்கெட்டுக்கு ₹900 செலவழித்து திரைப்படத்தின் மீது பைத்தியம் பிடித்த பொது மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை இழக்கிறார்கள்.

“அதற்கு மேல், இந்த நன்மை நிகழ்ச்சிகளால் எழும் பிரச்சினை உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கிஷன் ரெட்டி இதை ஒரு அரசியல் பழிவாங்கலாக பார்க்கக்கூடும். இந்த வழக்கில் ஏ11 ஆக இருக்கும் அல்லு அர்ஜுனை எப்படி கைது செய்ய முடியும்? என்று புரந்தேஸ்வரி கேள்வி எழுப்பலாம். ஆனால் ரேவந்த் ரெட்டி இதில் முற்றிலும் சரியான நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதே என் கருத்து.

இந்த வழக்கு தொடர்பாக ரேவந்த் ரெட்டி எடுத்து வரும் நல்ல முயற்சிகளுக்காக அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறினார். விஷ்ணுகுமார் ராஜூ எதையும் மனதில் போட்டு உடைத்து விடும் பழக்கம் உடையவர். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் பக்கம் நிற்கும் பாஜகவின் நிலைப்பாட்டை அவர் இப்போது ஒதுக்கி வைத்துவிட்டு ரேவந்த் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தென்மலர் மல்லண்ணா அல்லு அர்ஜூன் மீது புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மணி பார்க்க தெரியுமா ..நொடியில் பார்வையற்ற மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share