அமெரிக்காவுக்கும் சாதியை கொண்டு சென்ற குஜராத்திகள்... இங்கேயுமா?.. செனட்டர்கள் கடும் எதிர்ப்பு..!
அமெரிக்காவில் சாதி பெருமை பேசிய குஜராத்திகளை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்க அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர்.
குஜராத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் நெட்டிசன் ஒருவர் செய்த போஸ்ட் காரணமாக இந்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் சாதிய ரீதியான அடக்குமுறைகள் அதிகம் இருக்கிறது. இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களுக்குள் பாகுபாடு இருந்தாலும், இந்தியாவில் இந்துக்கள்தான் அதிக அளவில் ஜாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த சாதியை ஆதரிக்கும் இந்துக்கள், அமெரிக்காவிற்கும் அதை ஏற்றுமதி செய்து இருப்பதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டயலன் பட்டேல் என்ற குஜராத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் நெட்டிசன் செய்த போஸ்டில், அமெரிக்காவில் டல்லாஸில் எனது சாதிகான் (லியுவா படிதார் சமாஜ் சாதி) வாலிபால் போட்டி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மொழி திணிப்பை கை விடுங்க! அமெரிக்காவில் வெடித்த போராட்டம்
அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர் குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம்.
நாங்கள் கிராமப்புற அமெரிக்காவில் மோட்டல் அல்லது பெட்ரோல் பம்ப் வைத்து உள்ளோம் என்று ஜாதி பெருமையுடன் போஸ்ட் செய்துள்ளார்.
ஜாதி பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்கா அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகர் ஜோசியா லிப்பின் காரட் செய்துள்ள போஸ்டில், "லியுவா படிதார் சமாஜ்" சாதி என்றால் என்ன, அவர்கள் ஏன் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்பதை எனது தாத்தா பாட்டிகளுக்கு எப்படி விளக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று கிண்டலாக கூறி உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் செய்துள்ள போஸ்டில், அமெரிக்கா என்பது தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள வர்க்க வேறுபாட்டை, ஜாதி வேறுபாட்டை இங்கே இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் செழுமையையும் சுதந்திரத்தையும் நாம் சீர்குலைக்க போகிறோம். முறையற்ற குடியேற்றம் காரணமாக அமெரிக்காவின் தேசிய மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது, என்று ஜாதி வெறியை கடுமையாக சாடி உள்ளார்.
"அமெரிக்கா வாய்ப்புகளின் நிலம்" என்று துல்லியமாக நம்மிடம் சாதி அமைப்பு இல்லாததால் "என்று குடியரசு கட்சி அரசியல்வாதி மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வெளிநாட்டு வர்க்க விசுவாசங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் செழிப்பையும் சுதந்திரத்தையும் நாம் நிலைநிறுத்த முடியாது ஒருங்கிணைப்பு இல்லாமல் குடியேற்றம் என்பது தேசிய மற்றும் கலாச்சார தற்கொலை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
குடியரசு கட்சி அரசியல்வாதி பிராண்டன் கில் காங்கிரஸ் உறுப்பினர் இல்ஹான் உமரை நாடு கடத்தக்கு ஒரு மனுவை சர்ச்சைக்கு உரிய வகையில் முன் வைத்ததற்காக முன்பு அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் தேர்வுகளுக்காக தலைப்பு செய்திகளில் மீண்டும் இடம்பிடித்து வருகிறார் என்று அமெரிக்கா பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உலக வங்கி, சர்வதேச பண நிதியத்திலிருந்து அமெரிக்கா விலகினால் என்ன நடக்கும்..? விரிவான அலசல்..!