×
 

முப்பது ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா.. எங்கள் வாரிசுகள் உங்கள் சட்டங்களை தூக்கி எறிவார்கள்... திருமா ஆவேசம்!

இந்துகளை இந்துக்களாக உணர வைக்க முடியாததால் சிறுபான்மையினருக்கு எதிராக திசை திருப்புகின்றனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.  “வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறும்போது அனைவருக்கும் எதிர் கருத்து கூற வாய்ப்பு அளிக்கப்பட்டது. நள்ளிரவு வரை பேச அனுமதியும் வழங்கப்பட்டது. மேலோட்டமாக பார்த்தால் அனைத்தும் ஜனநாயக முறையில் நடந்தேறியது போலத்தான் தெரியும். ஆனால், பாஜகவிடம் உள்ள பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தையே படுகொலை செய்தனர். இதுதான் நவீன பாசிசம்.



முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் கூறுகிறார்கள். பிற மதத்தவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் பாஜகவினரே இதைப் பரப்புகின்றனர். இந்து, கிறிஸ்தவர்களின் சொத்து குறைவாக இருக்கிறது என்பதற்கு ஏதாவது புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா? இந்துக்களை இந்துக்களாக உணர வைக்க முடியாததால் சிறுபான்மையினருக்கு எதிராக இவர்கள் திசை திருப்புகின்றனர். 30 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்போம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார். அதன்பிறகு எங்கள் வாரிசுகள் வந்து அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை தூக்கி எறிவார்கள்.



தமிழகத்தில் திமுகவை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களது கனவு விசிக இருக்கும் வரை பலிக்காது. கூட்டணியில் எத்தனை சீட்டுகள் வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல. சட்டப்பேரவையில் எங்கள் சார்பில் ஒற்றை குரல் ஒலித்தாலும் அது எங்களுடைய கொள்கைக் குரலாக ஒலிக்கும்,” என்று திருமாவளவன் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: வக்பு சட்டம் எதிர்ப்பு.. திமுக அரசிடம் கற்றுக்கோங்க.. காஷ்மீர் அரசுக்கு முப்தி மெகபூபா கொட்டு!

இதையும் படிங்க: சொன்னதை செய்த திமுக.. வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மனு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share