பச்ச பிள்ளையை இப்படியா பண்ணுவ.. 2½ வயது குழந்தைக்கு சூடு.. அங்கன்வாடி ஊழியர் அடாவடி..!
திண்டுக்கல் அருகே இரண்டரை வயது குழந்தைக்கு கழுத்தில் அங்கன்வாடி ஊழியர் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள சுரைக்காய் பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களது மகள் தர்ஷிகா ஸ்ரீ (வயது 2½). ராஜபாண்டி - சினேகா தம்பதி தக்களது குழந்தையை அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சேர்த்துவிட்டு உள்ளனர். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 13 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
தர்மத்துப்பட்டி சேர்ந்த பாப்பாத்தி ஆசிரியராக உள்ளார். உதவியாளராக சுரக்காய்பட்டி சேர்ந்த செல்லம்மாள் இருந்து வருகிறார். தினந்தோறும் சினேகா, தனது மகள் தர்ஷிகா ஸ்ரீயை காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து செல்வதும் மாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதும் வழக்கம்.
இந்நிலையில் நேற்று அங்கன்வாடியில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ சோர்வடைந்து காணப்பட்டாள். இரவு வீட்டிற்கு வந்த தந்தை ராஜபாண்டியிடம், அழது கொண்டே ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததை கூறினாள். இதயைடுத்து காயத்திற்கு மருந்து தடவை தூங்க வைத்தனர்.
அடுத்த நாள் காலை அங்கன்வாடி மையத்திற்கு சென்ற பெற்றோர், ஆயம்மா செல்லாம்மாளிடம் குழந்தைக்கு ஏன் சூடு வைத்தீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு செல்லம்மாள், குழந்தை சொன்னதை கேட்காமல் சேட்டை செய்தது. அதனால் தான் சூடு வைத்தேன். அதற்கு என்ன இப்ப என்று திமிராக பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: போலி உணவு பாதுகாப்பு அதிகாரி அட்ராசிட்டி.. பழனி, திண்டுக்கலில் வசூல் வேட்டை.. செல்போன் பேச்சால் சிக்கியது எப்படி?
அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி போலீசில் இரவு சென்று புகார் அளித்தார். அந்த புகாரில், அங்கன்வாடி ஊழியர் செல்லம்மாள், எனது குழத்தைக்கு சூடு வைத்து கொடுமை படுத்தியுள்ளார். இவர் கொலை செய்துவிட்டு தெரியவில்லை என்றும் கூறுவார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இந்த நிலையில் இரண்டரை வயது குழந்தைக்கு கழுத்தில் அங்கன்வாடி ஊழியர் சூடு வைத்து கொடுமை படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அதிகாரி பூங்கொடிக்கு தெரியவந்தது.
மேலும் அதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சரவணனுக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அதிகாரி பூங்கொடி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் அங்கன்வாடி மையத்தின் பணியாளர் பாப்பாத்தி, உதவியாளர் செல்லம்மாள் ஆகியோர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக திட்ட அதிகாரி பூங்கொடி தெரிவித்தனர்.
அங்கன்வாடி மையத்தில் இரண்டரை வயது குழந்தை சேட்டை செய்தது என்பதற்காக அங்கன்வாடி ஊழியர்கள் சேர்ந்து அந்த குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!