பிரதமர திட்டினா கூட அவரோட கெத்து வேற லெவல்..? சீமானை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்த அண்ணாமலை..!
சீமான் பாரத பிரதமரையே விமர்சித்திருந்தாலும், அவர் களத்தில் திமுகவை எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலுக்காக அவரை ஊக்கப்படுத்தியதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சீமான் பாரத பிரதமரையே விமர்சித்திருந்தாலும், அவர் களத்தில் திமுகவை எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலுக்காக அவரை ஊக்கப்படுத்தியதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சீமானை ஸ்ட்ராங்கா இருங்க... தொடர்ந்து ஃபைட் பண்ணுங்க அண்ணா என கூறியது எதற்காக என விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அண்ணாமலை, சீமான் அண்ணன், எனக்கு நல்ல நண்பர். அவர் ஏன் ஸ்ட்ராங்கா இருக்கணுன்னா. தமிழகத்தில் திராவிட கட்சிகளை எதிர்க்கிறீங்கன்னா பலமுனை தாக்குதல் வரும். குறிப்பாக பெரியாரை கையில் எடுத்தீங்கன்னா, பலமுனையிலிருந்து தாக்குவாங்க, பர்சனல் லைஃப் உள்ள போவாங்க, காவல்துறையினுடைய அத்துமீறலை பார்ப்போம். ஒரு மனிதனை தொடர்ந்து நீங்க அடிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா, அது எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் ஒரு இடத்துல வந்து மனது சோர்வடையும்.
இதையும் படிங்க: FIGHT பண்ணிட்டே இருங்க அண்ணா! STRONG- ஆ இருங்க..! சீமானுக்கு ஊக்கம் தந்த அண்ணாமலை..!
நான் அண்ணன் சீமானிடம் சொன்னேன், உங்க பாதையில் நீங்கள் போய்க்கொண்டே இருங்கள். எங்களுக்கும் அவருக்கும் நேரெதிர் கொள்கைகள் இருந்தாலும் கூட, அவர் பாரதிய ஜனதா கட்சியை நிறைய இடத்தில் விமர்சனம் செய்தாலும் கூட பிரதமரை விமர்சனம் செய்தாலும் கூட, அடிப்படையில தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளை எதிர்த்து துணிவாக நின்று கொண்டிருக்கின்றார். அதனால அவர் துணிவா இருக்கணும். அவருடைய பாதையில் அவர் போகட்டும், எங்க பாதையில் நாங்க போகிறோம் என்றார்.
குறிப்பாக காவல்துறை வீட்டுக்குள்ள போனதை நாம் காட்சி ஊடகத்தில் எல்லாமே பார்த்தோம். தொடர்ச்சியாக இப்படி நடக்கும் பொழுது யாராக இருந்தாலும் கூட மனச்சோர்வு ஏற்படும். அதனால சீமான் அண்ணனை எதாச்சியாக இந்த கல்யாண் நிகழ்வில் பார்க்கும் பொழுது, ஒரு வார்த்தை சொன்னேன் “அண்ணா தைரியமா இருங்க. உங்க அரசியல் பாதியில நீங்க போய்கிட்டே இருங்க” என சொன்னேன். சீமானின் கட்சிகள் கோட்பாடுகள் வேறு வேறு இருந்தாலும் கூட அவரும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யணும்னு தான் நினைக்கிறாங்க, ஒரு அரசியல் நாகரிகமாகத்தான் நான் அதை பார்க்கிறேன். அதை மீடியா நண்பர்கள் எப்படி எல்லாம் இதை ரெக்கார்ட் பண்றீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கிறது? என்றார்.
இதையும் படிங்க: திமுக அரசின் நாடகம்... பாஜக எம்.பி-க்களுடன் டீல்: உண்மையை உடைத்த சீமான்..!