×
 

தலைவர் பதவி: அண்ணாமலை அவுட்... நயினாருக்கு ஆப்பு... விதியை மாற்றிய பாஜக..!

பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சியில் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பாஜக தமிழ்நாடு மாநில தலைவருக்கான தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக புதிய தலைவருக்கான தேர்வில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்டது. அண்ணாமலையே மீண்டும் தலைவராகக் கூடும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜகவில் 10 ஆண்டுகள் நிரம்பியவர்தான் பாஜக தலைவராக முடியும் என்ற புதிய விதிமுறையால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக தலைவராவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

 தீவிர பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும். 10 பொதுக்குழு உறுப்பினர்களின் பரிந்துரை தேவை எனவும் பாஜக புதிய விதியை கொண்டு வந்துள்ளது. எனவே, மூத்த தலைவர்களில் ஒருவர்தான் தமிழக பாஜகவின் புதிய தலைவர் ஆவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சியில் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு முதல்வரின் சுயநல நாடகம்..! திமுகவை ரோஸ்ட் செய்த அண்ணாமலை..!


 
அண்ணாமலை, நயினாரை போட்டியில் இருந்து விலக்கி வைப்பதற்காக திடீர் தகுதி நிர்ணயமா? எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரை தேர்வு செய்த போது இதுபோன்ற தகுதி நிர்ணயம் இல்லை. மாநில பாஜக தலைவர் பதவிக்கு புதிய முகங்களை தேர்வு செய்ய வாய்ப்பு என கூறப்படுகிறது . 

நயினார் நாகேந்திரன் 2017ல் தான் பாஜகவில் இணைந்தவர் என்பதால் அவர் போட்டியிட முடியாது. தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக நயினார் நாகேந்திரன் வருவதற்கு வாய்ப்பு குறைவு. தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நயினார் நாகேந்திரனுக்கு முதல் சிக்கல். டெல்லி சென்ற நயினார் நாகேந்திரனை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்கவில்லை எனக்கூறப்படுகிறது. மாநில தலைவர் பதவிக்கு அண்ணாமலையும் மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ரவி நேரில் அஞ்சலி.. திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share