நள்ளிரவில் டார்ச் உடன் புதையல் தேடும் மக்கள்.. மராத்தியர்களின் தங்க புதையல்..?
மத்திய பிரதேசத்தில் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிகார் கோட்டையில் தங்க புதையல் இருப்பதாக பரவிய வதந்தியை அடுத்து அங்கு ஏராளமான மக்கள் ஒன்று கூடி புதையதை தேடிய நிகழ்வு நடந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மனதில் சத்ரபதி வீர சிவாஜி இன்றளவும் கதாநாயகனாக வாழ்கிறார். அவரின் ஆட்சி காலத்தில் அவர் பங்கேற்ற எண்ணற்ற போரில் பல தங்க நாணயங்களை அவர் பெற்றதாக பல்வேறு வரலாற்று கதைகள் தெரிவிக்கின்றன. அவற்றை எல்லாம் எதிரிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் பயந்து சிவாஜி மறைவிடத்தில் வைத்ததாகவும் இன்றளவும் மக்கள் நம்பி வருகின்றனர். இதுகுறித்த ஏராளமான செவி வழிக்கதைகள் இன்றளவும் மகாராஷ்டிராவில் பேசப்பட்டு வருவதுண்டு. சத்ரபதி வீர சிவாஜியின் அரியணை, போர் வாள் ஆகியவற்றை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி அவரது போர் வீரர்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலிவுட்டில் வெளியான சாவா திரைப்படம், இந்த புதையல் குறித்து மக்களின் ஆசையை மேலும் தூண்டி உள்ளது. சாவா திரைப்படம் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு பாலிவுட் திரைப்படம். இதில் நடிகர் விக்கி கௌஷல் சாம்பாஜியாகவும், நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 500 கோடிக்கும் மேல் வசூலை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: 14.8 கிலோ தங்கம் கடத்திய வாகா பட நடிகை ரன்யா...! தூக்கி ஜெயிலில் போட்ட போலீஸ்..!
சாவா திரைப்படத்திம் கதைப்படி, சத்ரபதி சிவாஜி மகாராஜா இறந்த பின்பு அவரது மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் அரியணைக்கு வருகிறார். அப்போது சத்ரபதி சிவாஜி மறைந்த செய்தி கேட்டு, முகலாய பேரசர் ஔரங்கசிப், மகாராஷ்டிரா மீது படையெடுத்து வருவார். அந்த போரில் மராத்தியர்கள் இடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கப் புதையலை முகலாயர்கள் மத்திய பிரதேசத்தில் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிகார் கோட்டையில் வைத்ததாக காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால் மக்கள் கோட்டையை சுற்றி தங்க புதையலை தேட துவங்கினர். இதன் காரணமாக கோட்டையை சுற்றிலும் மேடு பள்ளங்களாக பள்ளங்கள் உருவாகி கோட்டையின் மதிப்பையே பாழ் படுத்தின.
இதுகுறித்து அறிந்த புர்ஹான்பூர் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் சிங் குழிகள் தொண்டுவதை தடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் தங்க நாணயங்கள் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் தொல்லியல் சிறப்பு மிக்கவையாக இருக்கக்கூடும். எனவே அது அரசுக்கு தான் சொந்தம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் சிங் கூறியுள்ளார். இதற்கிடையே செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கோட்டையை சுற்றி மக்கள் குழி தோண்டி தங்க நாணயங்களை தேடும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தினுசு தினுசாய் யோசிக்கிறாங்கப்பா.. ஏர்போர்ட்டில் சிக்கிய 1.39 கிலோ தங்கம்.. கடத்தல்காரரை மடக்கி பிடித்த அதிகாரிகள்..!