×
 

அக்கவுண்டுல இவ்ளோ பணமா? ஏடிஎம் கார்டை அபேஸ் செய்த திருடன்.. நகைக்கடையில் ஜாலி பர்சேஸ்..!

ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளியின் ஏடிஎம் கார்டை நைசாக திருடிய மர்மநபர், அந்த கார்டை வைத்து தில்லாக நகைக்கடையில் நகைகள் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி. புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்.  ஆண்டிபட்டி காய்கறி மார்க்கெட்டில் கூலிதொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சேகர் பல நாட்களாக முயற்சி செய்து, வங்கி ஒன்றில் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். பல கட்ட சோதனைகளுக்கு பிறகு அவருக்கு வங்கியில் இருந்து கடன் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது.  

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் உங்கள் அக்கவுண்டுக்கு பணம் வந்துவிடும் என வங்கியில் தெரிவித்துள்ளனர். இதனால் பணம் எப்போது வரும் என சேகர் ஆவலோடு காத்திருந்தார். இந்த அவரது மொபைல் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. தனது அக்கவுண்டிற்கு பணம் கிரெடிட் ஆகி உள்ளதாக அதில் செய்தியை பார்த்தவுடன் சேகர் மகிழ்ச்சி அடைந்தார்.

எனினும், ஏழரை லட்சம் ரூபாய் வீட்டுகடனுக்கு பதிவு செய்து பணம் தனது வங்கிக்கணக்கில் வந்துவிட்டதா என்று என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள,  ஆண்டிபட்டி எஸ்பிஐ ஏடிஎம்மில் சோதனை செய்து பார்க்கலாம் என்று நினைத்துள்ளார். ஏடிஎம் சென்ற சேகருக்கு, அதனை எப்படி உபயோகிப்பது என்பது தெரியவில்லை. தனக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒரு நபரிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தான் உங்களுக்கு உதவி செய்வதாக, வங்கி கணக்கில் உள்ள பண விவரத்தை காட்டி உள்ளார். அதில் ஏழரை லட்சம் ரூபாய் இருந்ததை பார்த்ததும் சேகர் குஷியானார்.

ஏ.டி.எம்., கார்டு மூலம் ரூ.10 ஆயிரம் எடுத்து கொடுக்க சொன்னதை தொடர்ந்து, அந்த நபர் ரூ.10 ஆயிரம் எடுத்து கொடுத்துள்ளார். அதன் பின்னர் உதவி செய்வதாய் சொன்ன நபர் தன்னிடம் இருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு கூலி தொழிலாளியான சேகரின் ஏடிஎம்-ஐ எடுத்துகொண்டு சென்று விட்டார்.

இதையும் படிங்க: இப்படியுமா சாவு வரும்..? பைக்கில் மறைந்திருந்த விஷப்பாம்பு.. பாம்பு கடித்து இளைஞர் பலி..!

அந்த மர்ம நபர், சேகர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி தேனி அல்லி நகரத்தில் ரூ.30 ஆயிரம், போடியில் உள்ள நகை கடையில் சேகர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.75 ஆயிரத்திற்கு நகை வாங்கியுள்ளார். மொத்தம் சேகர் கார்டில் ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரம் பணத்தை ஏமாற்றி எடுத்துள்ளார். இதையறியாமல் வீட்டிற்கு வந்த கூலி தொழிலாளி சேகருக்கு தனது வங்கிக்கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் எடுக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கூலி தொழிலாளி சேகர், இதுகுறித்து வங்கிக்கு சென்று கேட்டுள்ளார்.

வீட்டு கடனுக்கு வட்டி எதுவும் பிடிச்சீங்கள என அப்பாவியாக கேட்டுள்ளார். அதற்கு வங்கி கிளை மேலாளர் கூலி தொழிலாளி சேகரின் வங்கி கணக்கில் இருந்து  மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு இருப்ப்தாக கூறி உள்ளார். இதில் ஏதோ ஏமாற்று வேலை நடந்திருப்பதை அறிந்த வங்கி மேலாளர் ஸ்டேட்மெண்டை செக் செய்து பார்த்த போது, பணமாகவும், நகைக்காகவும், கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 

கூலி தொழிலாளி சேகரை ஏமாற்றிய மர்ம நபர் அந்த பணத்தை எடுத்துவிட்டு, அதனை வைத்து நகைக்கடையில் தங்கநகை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து கூலி தொழிலாளி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரை வைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கூலி தொழிலாளி சேகரை ஏமாற்றிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நூதன முறையில்  ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூலி  தொழிலாளியை ஏமாற்றி மர்மநபர் ஒருவர் பணத்தை கொள்ளை அடித்துள்ள சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான சிசிடிவி காட்சிகளும் உள்ளன.

இதையும் படிங்க: பணிக்கு வராத அரசு மருத்துவர்..? வேறு டாக்டர் வைத்து சிசேரியன்.. பிறந்த 10 நிமிடத்தில் இறந்த குழந்தை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share