×
 

காளையர்களை பறக்கவிட்ட காளைகள்; அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 12 பேர் காயம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6:30 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர். 189 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 112 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு  177 ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் நோக்கிச் செல்ல தகுதி சான்றிதழ் பெற்றன. 

12 பேர் காயம்: 

முதல் சுற்றில் 77 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. தற்போது மூன்றாவது சுற்று சுற்று நிறைவடைந்து, 4வது சுற்று நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு நடுவே மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து வருகின்றனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். தங்களை பிடிக்க முயலும் காளையர்களை காற்றில் பறக்கவிட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றனர். அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 12 பேர் காயமடைந்துள்ளனர். 7 மாடுபிடி வீரர்கள், 4 மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர் ஒருவர் என மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காவல்துறை வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

4 வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி: 

இதில் திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் டேவிட் வில்சன் என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். தற்போது இவர் மேற்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டி போட்டியில் தற்போது வரை 3 சுற்றுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 4 மாடுபிடி வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 8 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி, 7 காளைகளை அடக்கிய திவாகர், 3 காளைகளை அடக்கிய ராகவா, 2 காளைகளை அடக்கிய மனோஜ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - ஏற்பாடு நிலவரம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share