×
 

பொன்முடியின் தூக்கத்தைக் கெடுத்த வானதி சீனிவாசன்... இன்று மாலை அதிரடி அறிவிப்பு!

அமைச்சர் பொன்முடியின்  பேச்சு விவகாரம் தொடர்பாக மாநில தலைவரிடம் கலந்து பேசி போராட்டம் செய்வது குறித்து இன்று அறிவிக்கப்படும்  எனக்கூறியுள்ளார்.

மகளிர் விடியல் பயணம் தொடர்பாக அமைச்சர் பொன்முடி பேசியது ஏற்கனவே சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சமய குறியீடுகளை கொச்சையாக பேசியிருப்பது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி விலைமாது-உடன் சமய நம்பிக்கைகளை ஒப்பிட்டு பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.

விலை மாது வீட்டில் சைவமா வைணவமா என கேட்கிறார்கள்.. என்று ஆரம்பித்து பேசிய அமைச்சர், சைவ குறியீடுகளை மிகவும் தரை குறைவாக விலைமாது உடன் ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் தரக்குறைவாக அமைச்சர் பொன்முடி பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு கடும் கண்டனம் எழுந்தது. ஒரு அமைச்சர் இப்படியா மேடையில் பேசுவது என பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர். 

இதையும் படிங்க: பொன்முடி சொன்னது விலைமாது கதையின் பாதி... க்ளைமேக்ஸை சொல்லி திமுக-வை பொசுக்கிய ரர.க்கள்..!

பொன்முடி இந்த ஆபாச பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். எந்த சூழ்நிலையில் பேசி இருந்தாலும் தவறுதான் என்று கனிமொழி தெரிவித்திருந்தார். இதனிடையே திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பொன்முடி விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து தனது சர்ச்சை பேச்சுக்கு மனம் வருந்துவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்”  என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். 

இதனிடையே, பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடியின்  பேச்சு விவகாரம் தொடர்பாக மாநில தலைவரிடம் கலந்து பேசி போராட்டம் செய்வது குறித்து இன்று அறிவிக்கப்படும்  எனக்கூறியுள்ளார். ஏற்கனவே பொன்முடியின் சர்ச்சை பேச்சைக் கண்டித்து ஏப்ரல் 16ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பொன்முடியின் ஆபாச பேச்சு.. முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.. பொசுக்குன்னு சொன்ன பிரேமலதா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share