×
 

பஸ் ஸ்டாண்ட்ல பாம் இருக்கு..! போலீசாருக்கு வந்த மிரட்டல் போன்கால்.. லால்குடி பஸ் ஸ்டாண்ட் ஹை அலர்ட்..!

திருச்சி லால்குடி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பள்ளி கல்லூரிகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல் வராமல் இருந்த நிலையில் தற்போது திருச்சி மாவட்டம் லால்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலமாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து துறையினருக்கும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அளிக்கபப்ட்டது. காலை முதலே லால்குடி பேருந்து நிலையம் உட்சபட்ச அலார்ட் நிலையில் பாதுகாக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உடனடியாக மோப்பநாய் ராக்ஷி மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் செந்தில்நாதன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய முதற்கட்ட சோதனையில் இது வெறும் புரளி என தெரியவந்துள்ளது. இருந்த போதும் பேருந்து நிலையம் முழுவதும் சோதனை நடைபெற்றது. 

இதையும் படிங்க: 1 மணி நேரம் தான் டைம்.. கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுச்சேரியில் பரபரப்பு..!

மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது மீண்டும் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் என வருகிறது. எனினும் இதுகுறித்து சைபர் கிரைம் போலிசாரிடம், திருச்சி போலீசார் புகார் அளித்துள்ளனர். விரைவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசாரிடம் சிக்குவார் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

சமீப காலமாக பொது இடங்களுக்கு இமெயில் மூலமாகவும்,  போன் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர், தனது ஐபி அட்ரஸை வி.பி.என் கொண்டு தொடர்ந்து மாற்றி, போலி இணைய முகவரியில் இருந்து மிரட்டல் விடுப்பதால் குற்றவாளியை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் சமீபத்தில் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இமெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சில மணி நேரங்களில் இது வெடிக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. 

உடனடியாக இதுகுறித்து அருகில் உள்ள தன்வந்தரி நகர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆட்சியர் அலுவலக கதவை மூடி சோதனையிட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். தீயணைப்பு வீரர்களும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அரை மணி நேரத்துக்கு மேலாக சோதனையிட்டனர்.

சோதனையில் வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பது உறுதி செய்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் வெடிகுண்டு நிபுணர்களும் புறப்பட்டுச் சென்றனர். இதனையடுத்து போக்குவரத்து தடை நீக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

இதையும் படிங்க: இது ஸ்கூலா? இல்ல லாட்ஜா? பள்ளியில் அரங்கேறிய கேவலம்.. கண்டித்த ஆசிரியருக்கு மிரட்டல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share