இவ்ளோ பொறாமையா..! தோழிக்கு பிரமோஷன்... கடுப்பில் தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்த பெண்..!
தன்னுடன் பணிபுரியும் தோழிக்கு பதவி உயர்வு கிடைத்த ஆத்திரத்தில் தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார் பெண் ஒருவர்.
பெண்களுக்குள் பொறாமை இருப்பது இயற்கை தான்... அதற்காக இப்படியா? உடன் பணிபுரியும் தோழிக்கு பதவி உயர்வு கிடைத்த ஆத்திரத்தில் தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து அவரைக் கொலை செய்ய முயன்றார் ஒரு பெண்.
விஷம் கொடுக்கப்பட்ட பெண்ணின் உயிர் தற்போது மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கைதாகி சிறையில் தவிக்கும் விஷம் கொடுத்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அலுவலக பதவி உயர்வு போட்டி காரணமாக நடைபெற்ற இந்த நிகழ்வு உயிருக்கு ஆபத்தாக மாறி இருக்கிறது. விஷம் கொடுத்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இதையும் படிங்க: பட்டாம்பூச்சியால் பறிபோன உயிர்.. பிரேசிலை உலுக்கும் 14 வயது சிறுவனின் மரணம்..!
பிரேசில் நாட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிரேசிலின் அபைடாடி கோயாஸை சேர்ந்த விஷம் கொடுத்த 38 வயது பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. இரண்டு பெண்களும் ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இருவரில் ஒருவருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டதால் பதவி உயர்வு கிடைக்காத பெண் ஆத்திரப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.
பதவி உயர்வு பெற்ற பெண் தனது இருக்கையில் இருந்து வெளியே சென்ற நேரம் பார்த்து ஊழியர்கள் தண்ணீர் பிடிக்கும் பகுதிக்கு சென்று தோழியின் பாட்டிலில் ரசாயன பொருள் ஒன்றை ஊற்றியது கண்காணிப்பு காட்சியில் பதிவாகி இருக்கிறது. இந்த கொடூர சதி திட்டத்தை அறியாத அந்த அப்பாவைப் பெண் தனது பாட்டிலில் இருந்த பானத்தை குடித்திருக்கிறார். உடனடியாக அவர் வாய் வெந்துவிட்டது.
உடனே சுதாரித்துக் கொண்ட அந்த பெண் மருத்துவ உதவியை நாடி அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஒரு வாய் குடித்தவுடன் அவர் நிறுத்தி விட்டதால் உயிர் பிழைத்தார். கூடுதலாக சற்று குடித்திருந்தால் அந்த இடத்திலேயே அவருடைய உயிர் போய்விடக் கூடிய கொடிய விஷம் அது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது விஷம் குடிக்க வைக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொறாமை கண்ணை மறைக்க விஷம் கொடுத்த பெண் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் தவிக்கிறார். இந்த வழக்கில் கொலை முயற்சி குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு ஆறு ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறாமையின் கொடிய விலை!
ஜவுளி தொழிற்சாலை விஷத்தின் பின்னணியில் தொழில் முறை பொறாமை இருப்பதாக தோன்றினாலும் பணியிட பொறாமை விரைவாக ஆபத்தான பகுதிக்குள் சுழன்று விடும் என்று உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பதவி உயர்வு கிடைக்காத ஆத்திரத்தில் ஏற்பட்ட வெறுப்பிற்கு இப்போது ஆயுள் தண்டனை மூலம் வாழ்க்கையையே விலையாக கொடுக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது அல்லவா?.
விசாரணை மேலும் விரிவடையும் போது அலுவலகப் போட்டிகள் மேற்பரப்புக்கு அடியில் இருண்ட நோக்கங்களை உருவாக்கக் கூடும் - வெற்றியின் கொண்டாட்டமாக இருக்க வேண்டியதை உயிர் வாழ்வதற்கான போராட்டமாக மாற்றக்கூடும் என்பதை இந்த வழக்கு ஒரு உறைய வைக்கும் நினைவூட்டலாக தோன்றுகிறது.
இந்த தகவலை மிகவும் உணர்வுபூர்வமாக உருக்கத்துடன் வெளியிட்டுள்ள டெய்லி மயில் செய்தியாளர் பிரேசில் நாட்டில் தற்போது இதே போன்று விஷம் கலக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும் உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: குவாட்டரை பங்கு பிரிப்பதில் தகராறு.. நண்பண் தலையில் கல்லை போட்டு கொன்ற தொழிலாளி.. மதுபிரியர்கள் நட்பில் சோகம்..!