அடமான கடன் வழங்க லஞ்சம்..! கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரிகள்..!
திருவள்ளூரில் தொழில் தொடங்குவதற்காக கடன் பெற்றவரிடம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கிச் செயலாளர் மற்றும் கணக்காளர் கைது செய்யப்பட்டனர்.
கூட்டுறவு சங்கங்களில், நிலம், வீடு, தொழில் சொத்துக்கள் போன்ற அசையா சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறும் வசதி உள்ளது. இது அடமானக் கடன் எனப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். இந்த நிலையில் தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்ற தொழில் தொடங்க நினைத்தவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய கூட்டுறவு வங்கிச் செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் ஹோட்டல் தொழில் செய்வதற்காக அடமான கடன் பெற்றுள்ளார். தனது பெற்றோர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்துவிட்டு கடன் பெற கேட்டுள்ளார். பின்னர் கடன் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவேற்றப்பட்ட நிலையில் கடந்த 27 ஆம் தேதி சிவகுமாரின் தந்தை பெயரில் 11 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பார்க்கிங் பண்ண சொன்னது குத்தமா..! எஸ்பிஐ காவலாளி மீது கொலைவெறி தாக்குதல்..!
தற்போது கூட்டுறவு சங்க செயலாளர் ராமலிங்கம் கணக்காளர் ஏகாம்பரத்திடம் 17 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது சிவகுமார் தன்னுடைய குடும்ப சூழ்நிலை பற்றி எடுத்து கூறி 15 ஆயிரம் ரூபாயை கொண்டு வருமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
ஆனால் லட்சம் கொடுக்க விரும்பாத சிவகுமார் திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் பேரில் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தொடரிய பணத்தை சிவகுமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
கூட்டுறவு சங்க செயலாளர் ராமலிங்கத்தின் அறிவுரைப்படி கணக்காளர் ஏகாம்பரத்திடம் அந்த பணத்தை சிவக்குமார் அளித்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழிக்கு பழி தீர்க்க திட்டம்.. தம்பி கொலையால் அண்ணன் ஆவேசம்.. பட்டாக்கத்தி, வெடிகுண்டுகள் பறிமுதல்..!