×
 

5 வயது மகளை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்... தந்தை அளித்த பகீர் வாக்குமூலம்!!

5 வயது மகளை தந்தை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம் கேட்போரை கதிகலங்க செய்துள்ளது.

உத்தரபிரதேச  மாநிலம் சீதாப்பூரில் வசிப்பவர் 40 வயதான மோகித் மிஸ்ரா. இவருடைய 5வயது குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி காணாமல் போனது. இது குறித்து ரோகித் மிஸ்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 4 குழுக்களை அமைத்து குழந்தையை தேடி வந்தனர். இந்நிலையில் தான் அந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குழந்தையை தேடி வந்த போலீசாருக்கு வயலில் சிறுமியின் சிறு உடல் பாகம் கிடப்பது தெரிய வந்தது.

அதை பார்த்து திகைத்த போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் அடுத்த நாள் குழந்தையின் மற்ற உடல் பாகங்களை கண்டுபிடித்தனர். குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதலில் ரோகித் குடும்பத்தை சந்தேகப்பட்ட போலீசார் விசாரணையை முடுக்கினர். அப்போது மோகித்தே தனது மகளை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம் தெரிய வந்தது. 

இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சம்... தாயை இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்!!

மோகித் குடும்பத்தினரும், அவர் வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த ராமின் குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகித் தனது மகளிடம் ராமு வீட்டுக்கு செல்ல கூடாது என கண்டித்துள்ளார். சிறுமி அதை கேட்காமல் அடிக்கடி ராமு வீட்டுக்கு சென்று விளையாடி வந்துள்ளது.

ஒரு நாள் ராமு வீட்டில் இருந்து தனது மகள் வருவதை பார்த்த மோகித் ஆத்திரம் அடைந்துள்ளார். உடனே குழந்தையை பைக்கில் வைத்து ஆளில்லா இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையின் கழுத்தை துணியால் நெரித்து கொன்று விட்டு பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி வயலில் வீசியுள்ளார். மோகித் அளித்த இந்த வாக்குமூலம் கேட்போரை கதிகலங்க செய்துள்ளது.
 

இதையும் படிங்க: விஷ ஊசிப்போட்டு காதலியை தீர்த்துக்கட்டிய காதலன்...போலீஸில் சிக்கிய 2 பெண்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share