விவசாயிகளுக்காக ‘பிரதமர் தான் தான்ய கிரிஷி யோஜனா’: பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 2025: பிரதமர் தான் தான்ய கிரிஷி யோஜனா
வேளாண்மைதான் தேசத்தின், பொருளாதாரத்தின் முதன்மையான எஞ்சின். வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த, 100 மாவட்டங்களில் மாநில அரசோடு இணைந்து “பிரதமர் தான் தான்ய கிரிஷி யோஜனா” திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு 3வது முறையாக ஆட்சிக்கு வந்து, இன்று 14-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறது. நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தனது 8-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
எங்கள் அரசு மாநில அரசுகளோடு இணைந்து பிரதமர் தான் தான்ய கிரிஷி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. சிறப்பு நடவடிக்கைகள், ஏற்கெனவே இருக்கும் திட்டங்களோடு சேர்த்து செயல்படுத்தப்படும். குறைவான மகசூல் இருக்கும் 100 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, மகசூலை பெருக்கும் வகையில் இந்த திட்டத்தை மாநில அரசுகளோடு இணைந்து மத்திய அரசு செயல்படுத்தும்.
பழங்கள், காய்கறிகல் விளைச்சளைப் பெருக்கும் வகையில், உற்பத்தியை அதிகப்படுத்தும வகையில் ஊக்கவிலை அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: இது தெரியுமா? பிப்ரவரி முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் என்ன?
அதிகமான விளைச்சல் தரும் விதைகள் திட்டம் தொடங்கப்படும்.
மக்னா வாரியம் பீகார் மாநிலத்தில் உருவாக்கப்படும். மீன்கள் பொருட்களில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. இந்திய பொருளாதார மண்டத்தில் மீன் தொடர்பான பொருட்கள் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் உருவாக்கப்படும். பருத்தி உற்பத்தியை பெருக்கவும், பயிர் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் திட்டங்கள் உருவாக்கப்படும்.
கிஷான் கடன் அட்டைகள் மூலம் குறைந்தபட்ச தொகை கடன்கல் 7.70 கோடி விவசாயிகள், மீனவர்கள்,பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும். கடன் தொகை அளவு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும்.
ஆத்மநிர்பார் யூரியா உற்பத்தி அதிகரிக்கப்படும். ஆண்டுக்கு 12.70 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அசாம் மாநிலத்தில் அமைக்கப்படும் கிராமங்களில் 1.50 லட்சம் அஞ்சலகங்கள் அமைக்ககப்பட்டுள்ளன, இங்கு விரைவில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி நிறுவப்படும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த பேமெண்ட் வங்கி உதவி புரியும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன்: 'பீகார் மதுபானி' சேலை அணிந்து, பட்ஜெட் தாக்கல்