மத்திய அரசின் பார்வை ஆர் எஸ் எஸ் பார்வை..எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு
கல்விக் கொள்கையில் மத்திய அரசின் பார்வை என்பது என்பது ஆர் எஸ் எஸ் பார்வையாக உள்ளது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் மாணிக்கம் தாகூர்
கல்விக் கொள்கையில் மத்திய அரசின் பார்வை என்பது என்பது ஆர் எஸ் எஸ் பார்வையாக உள்ளது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் மாணிக்கம் தாகூர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியார்களிடம் பேசினார் .அப்போது ஜனநாயகத்தை காக்க வேண்டிய உள்துறை அமைச்சரே அம்பேத்கரை சிறுமைப்படுத்தியதும் நையாண்டி செய்ததும் அவருடைய மதவாத சிந்தனையை காட்டுகிறது என்றும் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் மத்திய அரசின் சட்டம் அதற்கு எதிராக உள்ளதால் எதுவும் செய்ய முடியாத சூழல் உள்ளது என்றும் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கினால் மட்டுமே விவசாயிகள் மீது வழக்கு போடுவதை நிறுத்த முடியும் எனவும் தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர் கல்விக் கொள்கையில் மத்திய அரசின் பார்வை என்பது ஆர் எஸ் எஸ் பார்வையாக உள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அழுத்தத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்
இதையும் படிங்க: "அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்" ..புஷ்பா பட பாணியில் பேசிய அன்பில் !
இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..