×
 

குற்றவழக்குகளில் கணவருக்கு தொடர்பு.. பெண் தலைமை காவலர் விபரீத முடிவு? பணிச்சுமையா? குடும்ப பிரச்னை காரணமா?

சென்னை புளியந்தோப்பில் தலைமை பெண் காவலர் செல்வி, தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவரது மரணத்திற்கு குடும்ப பிரச்னை காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு காவலர்  குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வி. இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 7 மணி அளவில் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் நடைபெறவிருந்த அணிவகுப்பில் செல்வி கலந்து கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் செல்வியை செல்போனில் தொடர்பு கொண்ட போது நீண்ட நேரம் செல்போன் அடித்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சக ஊழியர்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினர்.

புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வரும் செல்வி நீண்ட நேரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. உடனடியாக சென்று பார்க்கும் படி அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் புளியந்தோப்பு  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வின் வீட்டின் கதவை தட்டிய போது அவர் திறக்கவில்லை.

உடனே போலீசார் செல்வி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு செல்வி தனது படுக்கை அறையில்  உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தனக்குத்தானே தூக்கு போட்டு உயிரை மாய்த்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதையும் படிங்க: பள்ளி கல்வித்துறை கொடுத்த ஷாக்... கவலையில் பள்ளி மாணவர்கள்!!

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் செல்வியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் செல்வி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் இவரது கணவர் நல்லுசாமி என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்  என்பதும் தெரிந்தது.

இதனால் கணவர் நல்லுசாமிக்கும் அவரது மனைவி செல்விக்கும் அடுக்கடி தகராறு ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. மன உளைச்சல் ஏற்பட்டு செல்வி சென்னைக்கு பணி மாற்றம் செய்து வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

நல்லுசாமி தற்போது  பஞ்சாயத்து துணை தலைவராக உள்ளதும் தெரிந்தது. இதனிடையே செல்வி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து தனது கணவர் நல்லுசாமி இடம் தொலைபேசியில் விவாதித்துள்ளார். அதில் நல்லுசாமிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கடந்த இரண்டு நாட்களாக செல்வி தனது கணவரிடம் காரசாரமாக பேசி வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பரபரப்பான சென்னை.. தூத்துக்குடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்.. ரவுடிகள் மீது அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share