×
 

அவ உத்தமி இல்ல.. நீ புஷ்பா புருஷன்டா.. தவறாக பேசிய முன்னாள் காதலன்.. ஆத்திரத்தில் வெட்டி சரித்த கணவன்..!

சிதம்பரம் அருகே மனைவி குறித்து தவறாக பேசிய மனைவியின் முன்னாள் காதலனை, கண்வர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள மேலமணக்குடி, வெள்ளாற்றின் கரையோரம் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்ததை கண்டனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குபதிந்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சிதம்பரம் அருகே உள்ள சாலியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் பாலகணபதி (வயது 21). பாலகணபதி அதே பகுதியில் கறிக்கடை வைத்துள்ளார். இவரின் முன்னாள் காதலியின் பெயர் ஐஸ்வர்யா. இவர்களின் காதல் முறிந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

ஐஸ்வர்யாவின் கணவர் பெயர் வினோத்குமார். (வயது 25). தற்போது இந்த தம்பதி குடும்பத்துடன் மேலமணக்குடி கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் மனைவி ஐஸ்வர்யா, தனது முன்னாள் காதலன் பாலகணபதியை அடிக்கடி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு பாலகணபதி, மேலமணக்குடி சென்று தனது முன்னாள் காதலியை சந்தித்து உள்ளார். இதுகுறித்து தெரிய வந்ததும், ஐஸ்வர்யாவின் கணவர் வினோத்குமார் இதனை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வினோத்குமார், பாலகணபதியிடம் பேச வேண்டும் என கூறி உள்ளார். இதனை அடுத்து வினோத் குமாரின் நண்பர்கள் பால கணபதியை சாலியந்தோப்பில் இருந்து டூ வீலர் மூலம் மேலமனக்குடியில் உள்ள வெள்ளாற்றின் கரையோரம் அழைத்து வந்து உள்ளனர்.

இதையும் படிங்க: மயங்கி விழுந்த பா.சிதம்பரம்.. பதறிபோய் ஃபோன் போட்ட மோடி.. நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!!

அங்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது வினோத்குமாரின் நண்பர்கள், பால கணபதியை அதிக அளவு குடிக்க வைத்துள்ளார்கள். பின்பு பால கணபதியிடம் பேசிய வினோத்குமார், இனி நீ எனது மனைவியை பார்க்க வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லி உள்ளார். அதற்கு பாலகணபதி ஜாலியாக கிண்டலாக பேசியுள்ளார். சினிமா படத்தில் வருவது போல, அவள் ஒரு புஷ்பா.

அவளுடைய கணவன் நீ தான். நீதான் புஷ்பா புருஷன் என்று பாலகணபதி பேசி உள்ளார். மேலும் புஷ்பாவுக்கு பல கணவன்கள் உள்ளார்கள். அதில் நானும் ஒருவன். பழைய காதலன் என்று போதையில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவின் கணவர் வினோத்குமார் பாலகணபதியை சரமாரியாக வெட்டி உள்ளார். வினோத் குமார் நண்பர்கள் ஸ்ரீராம் கதிரவன் அரவிந்த் மற்றும் சிலர் சேர்ந்து பாலகணபதியை வெட்டி உள்ளார்கள். 

இதில் பாலகணபதி படுகாயம் அடைந்தார். பால கணபதியின் தலை மற்றும் கைகளில் வெட்டி வினோத்குமாரின் நண்பர்கள் பின்பு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். இது தொடர்பாக சிதம்பரம் தாலுகா காவல் நிலையம் காவல்துறையினர் தகவல் அறிந்து பால கணபதியின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இதைக் கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரி சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உள்ளார்.

இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். நாளைக்குள் குற்றவாளிகள் முழுவதும் பிடித்து விடுவோம். இது கள்ளக்காதலால் ஏற்பட்ட கொலை என்று கடலூர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். மனைவியை குறித்து தவறாக பேசிய முன்னாள் காதலனை நண்பர்களோடு சேர்ந்து கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நடுங்க வைக்கும் கொலை சம்பவங்கள்! சென்னையில் இளைஞர் வெட்டி படுகொலை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share