பூட்டிய காருக்குள் சிக்கிய குழந்தைகள்.. மூச்சு திணறி பலியான சோகம்.. ஆட்டோமெட்டில் லாக்கால் வந்த வினை..!
தெலங்கானாவில் திருமண வீடு ஒன்றில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் காருக்குள் சிக்கிக் கொண்டு மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் தமரகிட்டா பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ராம்பாபு. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை தொடர்ந்து திருமணத்துக்காக உறவினர்கள் எல்லோரும் தமரகிட்டா வந்தனர். ராம்பாபுவின் சகோதரிகளான ஜோதி, உமாராணி குடும்பமும் வந்தது.
பமேனா கிராமத்தைச் சேர்ந்த கவாலி வெங்கடேஷ் மற்றும் ஜோதி தம்பதி தனது 5 வயது மகள் தன்மயிஷ்ரியும், ஷாபாத் மண்டலத்தில் உள்ள சீதாராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மகேந்தர் மற்றும் உமாராணியின் 4 வயது மகளான அபிநயிஷ்ரியும் தாய் மாமன் திருமணத்திற்கு பெற்றோருடன் வந்தனர். பல நாட்களுக்கு பிறகு உறவினர்கள் கூடியதால் மகிழ்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தனர்.
இரண்டு குழுந்தைகளின் பெற்றோர்கள் அவர்களுடன் பேசி கொண்டுருந்தனர். குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்தனர். மதியம் 12:30 மணிக்கு வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்த ஜோதியின் 5வது மகள் தன்மயா ஸ்ரீயும், உமாராணியின் 4 வயது மகள் அபிநயா ஸ்ரீயும் வீட்டுக்கு வெளியே நின்ற தாய் மாமன் ராம்பாபு காரில் ஏறி விளையாடினர். காருக்குள் சென்றதும் டோரை அடைத்தனர்.
டோர் ஆட்டோ லாக் ஆகி விட்டது. காரின் அனைத்து கண்ணாடியும் மூடப்பட்டு இருந்ததால், காற்று உள்ளே வர வழியே இல்லை. சில நிமிடங்களில் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோரை கூப்பிட்டு கதறினர். அனைத்து கதவுகளும் மூடப்பட்டு இருந்ததால், இம்மி அளவு கூட சத்தம் வெளியே கேட்கவில்லை.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை.. கழிவறையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. வீடியோ எடுத்து வைத்த காமுகன்..!
குழந்தைகள் காரில் இருப்பதை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் யாரும் கவனிக்கவில்லை. அவர்கள் இருவரும் வெளியே எங்கோ விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்தார்கள். மதியம் வேலை என்பதால் வெயில் சுட்டெரித்த்துள்ளது. வெயில் சுட்டெரித்ததால் காருக்குள்ளும் வெப்பம் அனலை கக்கியது. காற்று இல்லாமலும் வெப்பத்தாலும் சிறுமிகள் மயக்கம் போட்டு, காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தனர். மதியம் 2 மணியளவில் வீட்டுக்குள் மகிழ்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்த உறவினர்கள், தன்மயா ஸ்ரீ, அபிநயா ஸ்ரீயை மட்டும் நீண்ட நேரமாக காணவில்லையே என்று சந்தேகத்தில் வெளியே வந்தனர்.
பெற்றோர் வீட்டில் பல தேடியபோது எங்கும் இல்லாததால் கார் ஜன்னல் வழியாக பார்த்த போது சிறுமிகள் இருவரும் மயங்கி கிடந்தனர். அதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவசரமாக கார் கதவை திறக்க முயன்றனர். ஆட்டோ லாக் ஆனதால் திறக்க முடியவில்லை. ஜன்னலை உடைத்து கதவை திறந்து சிறுமிகளை வெளியே எடுத்தனர்.
பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த சிறுமிகளை தூக்கிக்கொண்டு காரில் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். குழந்தைகளின் இருவரும் இறந்ததால் திருமண வீட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 96 படம் போல ரீயூனியன்.. பள்ளி நண்பனுடன் தொடர்பு.. 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்..!