நமக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்.. எவனோ கேம் ஆடுறான்.. சிறுமிகளிடம் கெஞ்சிய போக்சோ போதகர்..!
கோவையை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குபதிந்து தேடி வரும் சூழலில், அவர் அந்த சிறுமிகளின் போனில் கெஞ்சும் ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 32). இவர் பல்வேறு மத போதனை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி வந்தவர். இவருடைய பிரம்மாண்ட மத போதனைகள் மூலம் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்தார்.
குறிப்பாக கிறிஸ்துவ பாடல்களை பாப் இசையில் பாடி, நடனமாடி அதன் மூலம் பிரபலமானார். ஜெபராஜ், எட்வின் ரூஸோ என்பருடன் இணைந்து கோவை கிராஸ்கட் சாலையில் 'கிங் ஜெனரேஷன்' என்ற பிரார்த்தனை கூடத்தை நடத்தி வந்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இதனால் ஜான் ஜெபராஜ் அங்கிருந்து அடித்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றின் போது, 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் அண்டை வீட்டுக்காரரான 14 வயது சிறுமிக்கும் முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்து உள்ளது. சிறுமிகள் வீட்டிற்கு வரும்போது எல்லாம் மத போதகர் ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள், பாதிரியாரின் தொடர் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர். இதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: தப்பித்தார் எடியூரப்பா.. POCSO வழக்கில் இடைக்கால தடை..!
இந்த புகாரின் அடிப்படையில், கோவை மத்திய போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் சிறுமிகளின் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மதபோதகர் ஜான் ஜெபராஜ் பேசுவதாக கூறப்படும் அந்த ஆடியோவில் உள்ளதாவது, புரிந்துகொள் நமக்கு இரண்டு பேருக்கும் இடையே மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. அதை வைத்து எவனோ ஒருத்தன் கேம் விளையாடி அசிங்கத்தை உண்டு பண்ணி, உன்னையும் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறான். என்னையும் துரத்தி துரத்தி சாவுக்கு நேராக ஓட வைத்திருக்கிறான்.
கர்த்தர் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சனை நடக்கும் பொழுது எந்த ஒரு மனுஷனும் முதலில் தோன்றுவது செத்துப் போயிடலாம் என்று. எனக்கு கிட்டத்தட்ட நான்கு ஐந்து முறை தற்கொலை செய்கின்ற எண்ணம் வந்தது. சாப்பிடவில்லை. ஒன்பது கிலோ கம்மியாகி விட்டேன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஆண்டவன் பிரசங்கத்தில் உட்கார்ந்து ஜெபம் செய்தேன். இவ்வளவு தப்பை செய்துவிட்டு இப்படி பண்றான் என நினைப்பாய். நம்ம ரெண்டு பேருக்கு தான் தெரியும் என்னென்ன தவறு நடந்தது என.
என்னவா இருந்தாலும் கர்த்தர் என்னை பார்த்துக் கொள்வார். மறுபடியும் சொல்கிறேன் உன்னை நான் பொது இடத்தில் அசிங்கப்படுத்த மாட்டேன் என மத போதகர் ஜான் ஜெபராஜ் பேசுவது போல அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் தற்பொழுது வரை அவர் தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டார்கெட் முடிக்க மாட்டியா? ஆடையை அவிழ்க்க சொல்லி அத்துமீறல்.. ஊழியர்களை நாய் போல் நடத்திய அவலம்..!