“எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!
பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அர்ச்சகர் அரங்கநாதன், தமிழக அரசின் தமிழ் வழியில் அர்ச்சகராக பயின்று தற்போது திருவண்ணாமலை கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கரூர் மாவட்டம், நேரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் உண்ட இலையில் பக்த்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க கோரி மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில், அவ்வாறு அங்கப் பிரதட்சணமும் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதுபோல பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடி பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்று விட்டனர். இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடைக் விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அறிவு இருந்தா மும்மொழிக் கொள்கையை ஏத்துக்க மாட்டாங்க..! அமைச்சர் பிடிஆர் ஓபன் டாக்..!
ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட ஆட்சியரும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு, வழக்கினைத் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று, " எச்சில் இலையில் உருளுவது வழிபாட்டு முறையாக இருப்பினும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. ஆகவே பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது" என உத்தரவிட்டனர்
இதையும் படிங்க: 17 வயது சிறுவன் வெறியாட்டம்.. சல்லி சல்லியாக நொறுங்கிய வாகனங்கள்.. JCB-யால் இடித்து தள்ளிய சிறுவன்..