சம்மட்டியால் அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்ட திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு!
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்ட மத்திய அரசு திட்டமிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
காந்தியை பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான இந்த 100 நாள் வேலை திட்டத்தை பிடிக்கவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது நியூஸ் தமிழ் செய்தியை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்
100 நாள் திட்டம் என்பது ஊரக வளர்ச்சியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான அளவுக்கு பணம் ஒதுக்கவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தது. கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். 14.25 கோடி பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: 100 நாட்கள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.. மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை..!
சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 17 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைக் கடுமையாக கண்டித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்தியை பிடிக்காத அவர்களுக்கு அவர் பெயரான இந்த 100 நாள் வேலை திட்டத்தை பிடிக்கவில்லை என்றும், இந்திய கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய அடிப்படையில்தான் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த திட்டத்தின் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரே அடியாக ஒளித்து விட வேண்டும் என்ற வேளையில் இறங்கி இருக்கிறது இரக்கமற்ற பாஜாக அரசு என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் உங்களுக்கு வேண்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய் கடனை கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! என உத்தரவிட்டுள்ளார்.
திமுக சார்பில் தமிழகம் முழுக்க அனைத்து ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைக்காக ஒதுக்கப்படாத நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒன்றியங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் நிலையில் இது குறித்து முதலமைச்சர் அவர்கள் தனது கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதை செய்ய திமுகவுக்கு தில் இருக்கா?... நெஞ்சில் அடித்து சவால்... அமித் ஷா ருத்ரதாண்டவம்!