×
 

கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் - முதல்வர் ஸ்டாலின் விளாசல்.

கூட்டணியில் விரிசல் விழும் என நினைப்பவர்கள் எண்ணத்தில் தான் மண் விழும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, பெ.சண்முகம், முத்தரசன், வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கருணாஸ், எர்னாவூர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இது பொதுக்கூட்டமாக இல்லாமல் வெற்றிக் கூட்டமாக நடைபெறுவதாக கூறினார். முதலமைச்சராக என்னை அமர வைத்தவர்கள் திமுக தொண்டர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தான். இந்த கூட்டணியில் விரிசல் விழும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பில் தான் மண் விழும் எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம் கல்வி தான். இதை உணர்ந்து கொண்ட பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கிறது என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: ‘மோசமான நிர்வாகத்தை மறைக்க முடியாதுங்க’... மு.க ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதிலடி..!

தேசிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். அமைச்சரின் பெயர் தான் தர்மேந்திர பிரதான். ஆனால் தர்மத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று விமர்சித்தார். கொடிய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க உருவாகியதுதான் இந்த கூட்டணி என கூறினார்.

இதையும் படிங்க: தினம், தினம் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்... முதலமைச்சர் மீது பாயும் அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share