முட்டி போடுடா..! சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர்கள் சஸ்பெண்ட்.. பெற்றோரை நேரில் அழைத்து விசாரணை..!
கோவையில் பணம் திருடியதாக சந்தேகப்பட்டு சீனியர் மாணவனை 10க்கும் மேற்பட்ட ஜூனியர் மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் அவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடக்கிறது.
கோவை, பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே திருமலையம்பாளையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள மாணவர் விடுதியில் மாணவர் விடுதியில் முதுகலை சீனியர் மாணவர் ஒருவரை, இளங்கலை மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விடுதியில் ஜுனியர் மாணவர்கள் இருந்த அறையில் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் கொடூரமாக தாக்கி உள்ளனர். பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டி சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, கைகளை உயர்த்த சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர்.
சீனியர் மாணவர் இரத்தக் காயங்களுடன் வலியால் கதறியும், ஜூனியர் மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்து உள்ளனர். இந்த தாக்குதலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் விடுதி அறையில் சீனியர் மாணவரை முட்டி போட வைத்து, இனிமேல் இப்படி பண்ண மாட்டேனு சொல்லு டா என சொல்லியவாறே ஜூனியர் மாணவர்கள் அடித்து மிரட்டுகிறார்கள். அந்த மாணவர், வலிக்கிறது என்று கைக்கூப்பி அழுகிறார். அவ்வாறு மாணவர் அழும்போதும் ஜூனியர் மாணவர்கள் விடாமல், முட்டி போடு. இல்லைனா போலீஸ்கிட்ட சொல்லிடுவோம். கையை மேல தூக்கு என்று மிரட்டி தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு.. நீதிமன்றத்தில் உறுதி அளித்த தமிழக அரசு..!
இந்த வீடியோ வைரலான நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையிலும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், கல்லூரிகளில் மாணவர்கள் இடையே நிலவும் வன்முறை கலாச்சாரத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது. மேலும் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எம்.ஏ படிக்கும் மாணவர் பணத்தைத் திருடிவிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஜூனியர் மாணவர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் எங்களிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட 13 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையிலும் தகவல் கொடுத்துள்ளோம். அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை அழைத்து விசாரணை செய்ய உள்ளோம் என்றனர்.
இந்நிலையில் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து சீனியர் மாணவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 ஜூனியர் மாணவர்களின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. அதனடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 மாணவர்களும் தங்களுடைய பெற்றோரை இன்று கல்லூரிக்கு அழைத்து வந்தனர். கல்லூரியில் வரம்பு மீறிய மாணவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் நடத்த வேண்டும்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!