மோடியை பாராட்டிய சசிதருர்.. காங்கிரஸ் காரனாகவே இருக்க முடியாது - சசிதரூர் விளக்கம்
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பை சந்தித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி-யான சசி தரூர் பாராட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைக்கும் சசிதரூர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். திருவனந்தபுரம் எம்பியாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது அதிரடி கருத்துக்கள்மூலம் சர்ச்சையில் சிக்குபவர் இவர். சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தது குறித்து அவர் பாராட்டியது சமூக வலைத்தளங்களின் வைரலாக பரவியது. இந்தப் பாராட்டு காங்கிரஸில் அதிர்வலைகளையும் பாஜகவில் மகிழ்வலைகளையும் ஏற்படுத்தியது.
தற்போது அது குறித்து விளக்கம் அளித்த சசி தரூர், எப்போதும் கட்சி நலனை பற்றிய பேசும் காங்கிரஸ் காரனாக இருக்க முடியாது. பிரதமரை பாராட்டியது இந்தியாவின் பரந்த நலனுக்காகவே என்று கூறியிருக்கிறார். பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப்பின் சந்திப்பின் சில முக்கியமான விடயங்கள் என்னவென்றால் இந்திய மக்களுக்கு பல நல்ல விஷயங்கள் உள்ளன, எனது கருத்துப்படி ஏதோ நல்லது சாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு மசோதா: இந்தியா சந்திக்கும் சவால்கள் என்ன?
அதை ஒரு இந்தியனாக நான் பாராட்டுகிறேன். இந்த குறிப்பிட்ட விஷயத்தில் நான் தேசிய நலனுக்காக மட்டுமே பேசுகிறேன் என்று இந்த செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். நாம் எப்போதும் கட்சி நலன் அடிப்படையில் மட்டுமே பேச முடியாது. நான் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்ல. திருவனந்தபுரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பி. அந்த அடிப்படையில் நான் இந்திய ஜனநாயகத்தில் ஒரு முக்கிய பங்குதாரராக பேசுகிறேன் என்றும் அவர் மேலும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது ஒரு நல்ல விளைவு என்று நான் நினைக்கிறேன்.
இல்லையெனில் வாஷிங்டனின் சில அவசர முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம். அது நமது ஏற்றுமதியை பாதித்திருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த பிரச்சினையில் விவாதிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தவும் நேரம் இருக்கிறது. எனது அரசியல் அணுகுமுறை எப்போதும் நிலையானது. ஆளும் கட்சியை பொருட்படுத்தாமல் நல்லாட்சியை ஒப்புக்கொண்டு பாராட்டுவது; அதே நேரத்தில் தேவைப்படும்போது அரசாங்கத்தையும் பொறுப்பேற்க வைப்பது என்பதுதான் எனது அணுகுமுறை.
காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அரசாங்கத்தில் உள்ள ஒருவர் ஏதாவது சரியாக செய்தால் அதை ஒப்புக்கொண்டு பாராட்ட வேண்டும். அவர்கள் ஏதாவது தவறு செய்யும் போது அதை விமர்சிக்க வேண்டும். நான் இரண்டையும் செய்து இருக்கிறேன். நான் பாராட்டியும் இருக்கிறேன். விமர்சித்தும் இருக்கிறேன். நியாயமாக சொல்வதானால் நான் எனது நிலைப்பாட்டை உண்மைகளின் அடிப்படையில் கொண்டிருக்கிறேன். அதுதான் சரியான அணுகுமுறை என்பதும் எனது கருத்து என்று அவர் தொடர்ந்து கூறினார்.
இருப்பினும் பிரதமரின் அமெரிக்க பயணம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவது போன்ற சில முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் விட்டுவிட்டது என்றும், அப்போது அவர் சுட்டிக் காட்டினார். ஒருவேளை மூடிய கதவுகளுக்கு பின்னால் (ஆப் த ரெக்கார்டு) அதை அவர் டிரம்ப் இடம் ராஜ தந்திரத்தில் எல்லாவற்றையும் பகிரங்கமாக முன்வைக்கப்படுவதில்லை என்றும் சசிதரூர் தெரிவித்தார். அரசாங்கம் செய்யும் அனைத்தும் தவறு என்று எதிர்க்கட்சி நம்பும் போதும் எதிர்க்கட்சி சொல்லும் அனைத்தும் தவறு என்று அரசாங்கம் நம்பும் போதும் உண்மையான பிரச்சினை எழுதுகிறது. ஜனநாயகத்தில் விட்டுக் கொடுப்பது இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: F35 போர்விமானம் கொள்முதல்: பிரதமர் மோடி தன்னிச்சையாக எப்படி முடிவெடுத்தார்? காங்கிரஸ் கேள்வி