16 மாநிலங்களில் சைபர் மோசடி... 10 ஆயிரம் கோடி சுருட்டிய பலே கில்லாடிகள்..!
16 மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் சைபர் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், telegram செயலியில் தனக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அந்த எண்ணில் தன்னுடைய நண்பர் படம் இருந்ததால் அவருடன் சாட்டிங் செய்ததாகவும் கூறியுள்ளார்.
அப்போது ஆடம்பர வாழ்க்கை வாழலாம், மூன்று லட்சம் ரூபாய் வரை தினமும் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியதால் அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் ரூ.94,70,300 அனுப்பியதாக தெரிவித்துள்ளார். சுனில் குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சுனில் குமார் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த கணக்குகள் ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுதீர் யாதவ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையும் படிங்க: விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்தது உண்மையா? - முதல் முறையாக உண்மையை பேசிய சீமான்...!
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பல் மருத்துவர் ஆனந்த் சோனி என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 90 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து சுனில் குமாரிடம் ஒப்படைத்தனர். மேலும் எஞ்சிய பணம் எங்கு உள்ளது என்பது தொடர்பாகவும் இந்த வழக்கில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்களும் வெளியாகின. இந்த மோசடியில் ஈடுபடுவதற்காக போலியாக ஒரு நிறுவனத்தை இருவரும் சேர்ந்து துவக்கி உள்ளதும், சுதீர் யாதவ் பெயரில் வங்கி கணக்கு துவக்கி 16 மாநிலங்களில் 51 சைபர் குற்றங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 10 கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி நடந்துள்ளதும் அம்பலமானது. இச்சம்பவம் தொடர்பாக எஸ்.பி கௌரவ் யாதவ் கூறுகையில், குற்றவாளியின் மொபைல் எண்ணை ஆய்வு செய்ததில் அதன் மீது 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டதில் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொகை இன்னும் அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தினம், தினம் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்... முதலமைச்சர் மீது பாயும் அண்ணாமலை...!