×
 

கான்வாயில் குறுக்கே புகுந்த கால்நடைகள்… இறங்கி மாட்டின் முன் நின்று தில்லாக ரெய்டுவிட்ட முதல்வர்..!

முதலமைச்சர் முதல் வேறு எந்த நபர்களுக்கும் சுவரொட்டி, விளம்பர பலகைகளை வைக்க யாருக்கும் உரிமை இல்லை.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா சென்று கொண்டிருந்தபோது தெருவில் திரியும் கால்நடைகள் திடீரென கான்வாயில் புகுந்ததால் அவசரமாக கார்கள் நிறுத்தப்பட்டன.

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் கான்வாய் தேசிய தலைநகரில் உள்ள ஹைதர்பூர் மேம்பாலத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. சாலையில் 4-5 தெரு விலங்குகள் திடீரென புகுந்ததால், வாகனத் தொடரணியில் இருந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் சடன் பிரேக் போட்டனர். இதனால் அதிர்ந்துபோன டெல்லி முதல்வர் ரேகா குப்தா காரில் இருந்து இறங்கி, விலங்குகள் சாலையில் வருவதைத் தடுக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முதல்வரின் கான்வாய் சுமார் 15 நிமிடங்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முதல்வர் ரேகா குப்தா இன்று புதன்கிழமை மெட்ரோ தூண்களை ஆய்வு செய்யச் சென்றிருந்தார்.

இதையும் படிங்க: RAMZAN-ல் RAM...DIWALI-ல் ALI - அசத்தும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் மத நல்லிணக்கம்..!

அப்போது, ​​மெட்ரோ தூண்களில் உள்ள சுவரொட்டிகள், விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவிட்டார். மெட்ரோ ரயில் தூண்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்த அவர், டெல்லியை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் மாற்ற வேண்டும் என்றார்.

அரசின் சொத்துக்களை சேதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறினார். முதலமைச்சர் முதல் வேறு எந்த நபர்களுக்கும் சுவரொட்டி, விளம்பர பலகைகளை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. டெல்லியை அசுத்தமாக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லி பெண்களே தயாரா இருங்க! மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியானது…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share