குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன்.. உருட்டு கட்டையால் அடித்து கொலை.. தென்னைமரத்தில் தூக்கிலிட்ட மாமனார், மாமியார்..!
மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மருமகனை, உருட்டு கட்டை மற்றும் மண்வெட்டியால் அடித்தே கொலை செய்த மாமனார், மாமியார் கைது
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள சில்லாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர். கூலி தொழிலாளியான இவர், அதே கிராமத்தை சேர்ந்த ரம்யா என்பவரை கடந்த 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மதுவுக்கு அடிமையாக சிவசங்கர், தினமும் குடித்துவிட்டு வந்து ரம்யாவை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி ரம்யா கோவித்துக்கொண்டு தனது அம்மா வீட்டில் சென்று தங்கிவிட்டார். கடந்த ஆறு வருடமாக மனைவியை பிரிந்து வாழும் சிவசங்கர், சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவி ரம்யாவுடன் சேர்ந்து வாழ அழைக்க அவரது மாமனார் பச்சையப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் குடித்துவிட்டு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமனார் பச்சையப்பனும், மாமியார் கவிதாவும் சிவசங்கரை அங்கிருந்து செல்லுமாரு விரட்டி உள்ளனர். இதில் பச்சையப்பனுக்கும், சிவசங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் மற்றும் கவிதா ஆகியோர் சிவசங்கரை உருட்டு கட்டை மற்றும் மண்வெட்டியால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிவக்குமாரின் சடலத்தை தென்னைமரத்தில் கட்டி தூக்கிலிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: என்னை ஜெயில்ல போடுங்க.. ஓய்வில் நன்றாக படிப்பேன் - சீமான் பரபரப்பு பேட்டி
இது தொடர்பாக சிவசங்கர் தந்தை சந்தியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட கடத்தூர் போலீசார், பச்சையப்பன் அவரது மனைவி கவிதா இருவரையும் கைது செய்தனர். இதனிடையே சிவசங்கர் கொலை வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தபின் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் நான்சென்ஸ்... சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. 11ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது.!