×
 

பாஜக -அதிமுக கூட்டணி..? எடப்பாடியாரை மிரட்டினாரா ஜெயகுமார்..? திமுகவின் சித்துவேலை..!

சமூகவலைதளங்களில் பரவிய அந்த செய்தி    எதிர்கட்சிகளால் வேண்டும் என்றே திட்டமிட்டு பரப்பப்படும் தகவல் எனக் கூறுகிறார்கள் ஜெயகுமார் தரப்பினர்.

''பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது. ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக சமூக ஊடகங்களில் தகவல் தந்தி அடித்து வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் தனித்தனியே போட்டியிட்டன. தேர்தலில் இரண்டு கூட்டணியும் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அதன்பிறகும் கூட, பாஜக-வுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் அடித்துச் சொல்லி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''திமுக-வை வீழ்த்துவதற்கு அதிமுக தயாராக இருக்கிறது. திமுக மட்டும்தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை. திமுக-வை வீழ்த்த வேண்டும் அதுதான் எங்கள் குறிக்கோள். அதற்காக வலுவான கூட்டணி அமைக்கப்படும். அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பாக ஆறு மாதங்கள் இருக்கும்போது அறிவிப்போம்" எனத் தெரிவித்து இருந்தார். திரைமறைவில் அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் ரூபத்தில் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு... அடித்துச் சொல்லும் அதிமுக மாஜி அமைச்சர்...! 

 

'பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது. ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆனால், ''இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது.ஜெயகுமார் இப்படித் தெரிவிக்கவே இல்லை'' என மறுத்துள்ளார் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன். ஆனல், சமூகவலைதளங்களில் பரவிய அந்த செய்தி    எதிர்கட்சிகளால் வேண்டும் என்றே திட்டமிட்டு பரப்பப்படும் தகவல் எனக் கூறுகிறார்கள் ஜெயகுமார் தரப்பினர்.

இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்... அதிமுக பாசம் அவ்வளவு லேசுல விடுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share