×
 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த தேமுதிக...

ரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லாததால்  அதனை புறக்கணிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் ஜனநாயக விரோதமாக நடைபெற்றதாக அந்த அறிக்கையில் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார். ஆடுகளை மந்தையில் அடைப்பதை போல் அடைத்து வைத்து அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு..

ஏற்கனவே அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக கூறிவிட்ட நிலையில் தேமுதிகவும் பின்வாங்கி உள்ளது. நடிகர் விஜய்-யின் தவெக போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது. திமுக, நாம் தமிழர் கட்சிகள் மட்டும் போட்டியிட போவதாக நேரடியாக அறிவித்துள்ளன. எஞ்சி இருக்கும் பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.   

இதையும் படிங்க: திமுக வேட்பாளரை பழி தீர்க்க திட்டம்.... ஈரோடு அஸ்திரத்தை கையில் எடுக்கும் பிரேமலதா விஜயகாந்த்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share