பட்டாசு கிளப்பும் திமுகவினர்..! அண்ணா அறிவாலயத்தில் களைகட்டியது கொண்டாட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. திமுக சார்பில் ஏற்கனவே ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரகுமார் களமிறக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டார். அதிமுக, பாஜக, தேமுதிக தேர்தலை புறக்கணித்ததால் அந்த கட்சியினரின் வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் எனக்கூறப்பட்ட நிலையில், நாதக வேட்பாளர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி 8ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 55,905 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 12 ஆயிரத்து 28 வாக்குகளைப் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இரு மடங்கு வாக்குப்பதிவு... நாதக முன்பு கெத்துக்காட்டிய நோட்டா ...!
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சித்தோடு பொறியியல் கல்லூரி முன்பாக பெரியார் வாழ்க என முழக்கமிட்டும், நடனங்கள் ஆடியும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரகுமார் முன்னிலை வகிப்பதையடுத்து சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் முன்பு திரண்ட ஏராளமான திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், தங்களுக்குள் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல், கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பட்டுக்கோட்டையில் விண்ணை அதிர வைக்கும் அளவிற்கு பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு ஜிலேபி வழங்கியும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எட்டித்தொட முடியாத உயரத்தில் திமுக; ஏக்கப் பெருமூச்சில் நாதக!