விஜய்க்கு அந்த அளவுக்கு சீன் இல்ல.... தெறிக்க விட்ட திமுக அமைச்சர் ஐ பெரியசாமி ...!
பாவக்காய் தலைவர் விஜய் தேர்தல் யூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து திமுக அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு விஜய்க்கு வாக்கு வங்கி இல்லை என திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானங்களை இன்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.பின்னர் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், ஊரக வளர்ச்சி துறை சார்பாக தூய்மை பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வளர் ச்சியடைந்த முன்னேறிய மற்றும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை. இந்த சாதனைகள் இன்னும் 40 ஆண்டுகள் தொடரும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரவேண்டுமா..? உச்சநீதிமன்றத்தில் புதிய சிக்கல்..!
தொடர்ந்து அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. வெற்றி தோல்வி என்பது தேர்தலில் சகஜம். ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பிராதான கட்சியான அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியது, தற்போது அந்த இயக்கம் இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. அந்த இயக்கம் காணாமல் போய்விட்டது என்று தான் அர்த்தம். வரும் தேர்தலில் அதிமுக இருப்பதாக தெரியவில்லை, 2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார். அதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் எனக் கூறினார்.
விஜய் - பிரசாத் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களுக்கு எந்த கட்சியும், இயக்கங்களை பற்றி கவலையில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரால் திமுக வெற்றி பெறவில்லை. மக்களால் தான் வெற்றி பெற்றோம். தற்போதைய ஆட்சியால் முதலமைச்சர் மீதான மக்கள் நம்பிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. 200 தொகுதிகளில் வெல்வோம் என்பது திமுக இலக்கு! ஆனால் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றார்.
மேலும் விஜய் ஒரு சினிமா நடிகர், அவருக்கு என்று ஒரு ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் இருந்து வந்து அரசியலில் வெற்றி பெற்றது எம்ஜிஆருடன் முடிந்துவிட்டது. தற்போதைய மக்கள் சினிமா வேறு, அரசியல் வேறு என பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டனர். இன்றைக்கு இருக்கும் முதியோர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் என யாரும் சினிமாவை அரசியலோடு கலப்பதில்லை. எனவே வெற்றியை தீர்மானிக்கும் அளவிற்கு விஜய்க்கு வாக்கு வங்கி இல்லை என்று கூறினார்
வரும் தேர்தலில் நான்கு அல்லது ஐந்து முனை போட்டி இருக்கும். திமுகவிற்கு யாரும் எதிரி கிடையாது மக்கள் இயக்கமாக திமுக செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவது ஏன்.? திமுகவை விளாசி தள்ளிய சீமான்..!