“நீ எல்கேஜி மறந்துடாத”... விஜயை ஒருமையில் வெளுத்து வாங்கிய கோவி.செழியன்!
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.லெனின் அரசியலில் திமுகவுக்கும் எனக்கும் தான் போட்டி என பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்தார்.
திருச்சி மாவட்டம். மணப்பாறை ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 72- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.லெனின் அரசியலில் திமுகவுக்கும் எனக்கும் தான் போட்டி என பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்தார்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “நேற்று கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகி விடலாம்னு ஒரு நடிகர் நினைக்கிறார். திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பல்கலை கழகம், நீ எல்கேஜி, யுகேஜி மறந்துவிடாதே. நீ எதிர்ப்பதற்குரிய இயக்கம், நீ போட்டி என்று சொல்லகிற இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. எனக்கும் திமுக வுக்கும் தான் போட்டி என்று. ஊரில் அந்த கட்சிக்கு ஆளே கிடையாது . 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும் எனக்கூறினார்.
இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி படிக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. வரும் தேர்தலில் நின்று வென்ற 40 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர் நான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூட ஏற்று வருவார் நம்பாதீர்கள். நீங்கள் முதலமைச்சர் என்று சொல்லி வந்தாலும் சரி, நீங்கள் முதலமைச்சராக வைத்து கொண்டாடுனீர்களே உங்கள் தலைவி புரட்சி தலைவி என்று சொல்லப்பட்ட ஜெ ஜெயலலிதா அந்த ஜெ ஜெயலலிதாவையோ வருகூர் தொகுதியில் சுகவனம் என்ற ஒரு ஒற்றை தொண்டனை வைத்து தோற்கடித்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் இயக்கம். நாங்கள் மட்டும் திராவிட பாதையை பின்பற்றினால் போதாது, எதிரியாக இருந்தாலும் இது பெரியார் பூமி நீயும் திராவிட பாதையில் போ என்று ஒரு இளந்த தலைவர் எதிர்கட்சி தலைவருக்கு அறிவுரை சொல்லும் முதல் வரலாறு, உதயநிதி ஸ்டாலின் என்ற கம்பீர தலைவனுடைய வரலாறு.
இதையும் படிங்க: பிரித்தாளுவதற்காக உகாதி வாழ்த்து கூறுகிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்.!!
தவெக பொதுக்குழு கூட்டத்தி பேசிய விஜய், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது. பாஜக ஆட்சியை பாசிசம் என்று சொல்லும் திமுக, தமிழ்நாட்டிலும் பாசிச ஆட்சியை நடத்துகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்ததுடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது.. இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக என பேசியிருந்தார். அதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா.? ஒரு முடிவில் இருக்கும் அண்ணாமலை.!!