2019 முதல் ஆல் ஏரியா நம்ம தான்.! கொக்கரிக்கும் திமுகவினர்
2019 முதல் ஆல் ஏரியா நம்ம தான்.! கொக்கரிக்கும் திமுகவினர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. அக்காட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வி.சி.சந்தரகுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சிகளே இல்லை என்ற அளவிற்கு பிரதான கட்சிகளான அதிமுக பாஜக புதிதாக முளைத்துள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட எந்த கட்சிகளும் களத்தில் குதிக்கவில்லை. திமுகவுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்று நேருக்கு நேர் சந்தித்தது.
இருப்பினும் எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவிடம் டெபாசிட்டை இழந்தது சீமானின் நாம் தமிழர் கட்சி திமுகவின் இந்த அமோக வெற்றியின் காரணமாக திமுக தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோடு தேர்தலில் திமுக வெற்றி..! முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன் சந்திரகுமார் பேட்டி
அதிலும் திமுக சமூக ஊடகப் பிரிவு சார்பில் பல போஸ்டர்கள் மற்றும் சமூக வலைதள டெம்ப்லேட்டுகள் உருவாக்கப்பட்டு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக 2019 இல் ஆரம்பித்து 2025 ஆம் ஆண்டு வரை எந்த தேர்தலிலும் தோல்வி அடையாமல் அமோக வெற்றி பெற்று வருகிறார் மு க ஸ்டாலின் என்று அட்டவணை போட்டு வேகமாக பகிர்ந்தும் பரப்பியும் வருகின்றனர்.
வெற்றி வீரர் மு க ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில்:
2019 நாடாளுமன்றத் தேர்தல்
2019 சட்டமன்றத் இடை தேர்தல்
2019 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்
2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல்
2021 சட்டமன்றத் தேர்தல்
2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தல் விளவங்கோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
2025 தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
எனக் கடந்த ஏழு வருடங்களாக யாரும் தொட முடியாத அளவிற்கு போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் திமுகவே தொடர் வெற்றி பெற்று வருகிறது. எனவே வெற்றியின் வீரர் மு க ஸ்டாலின் என புகழாரம் சூட்டி திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர் தேர்வில் முறைகேடா?.. தமிழக அரசு விளக்கம் அளிக்க பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்..