ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கம்: அதிபர் ட்ரம்ப் அதிரடி
அமெரி்க்க முன்னாள் அதிபர் ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அனைத்து அட்டர்னி ஜெனரல்களையும் பூண்டோடு நீக்கி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக 2வது முறை டொனால்ட் டரம்ப் வந்தபின் பல அதிரடியான முடிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பினார், அலுமினியத்துக்கு 25 சதவீத சுங்கவரி விதிப்பு, இந்தியாவுக்கு வழங்கிய நிதி நிறுத்தம் என அதிரடியாக உத்தரவுகளை அதிபர் ட்ரம்ப் பிறப்பித்தார். அது மட்டுமல்லாமல் முன்னாள் அதிபர் ஜோ பிடன் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள், நியமனங்களையும் அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து வருகிறார். இந்திய தொழிலதிபர் அதானி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்ததையும் அதிபர் ட்ரம்ப் அரசு ரத்து செய்தது.
இந்நிலையில் ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அனைத்து அட்டர்னி ஜெனரல்களையும் நீக்கி அதிபர் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்கஅரசும், அரசு துறைகளும் அரசியலாக்கப்பட்டதுபோல் வேறு எப்போதும் மோசமடைந்தது இல்லை. ஆதலால், பிடன் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து அட்டர்னி ஜெனரல்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக வெள்ளை மாளிகையை சுத்தம் செய்ய வேண்டும், நம்பிக்கையை தக்கவைக்க வேண்டும்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஏன் 2.10 கோடி டாலர்கள் வழங்க வேண்டும்: நிதியை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்காவின் பொற்காலம் என்பது நியாயமான நீதித்துறை, நீதி வழங்கும் முறையா இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அமெரி்க்காவில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் வரும்போது, புதிய அதிபராக வருபவர், ஏற்கெனவே இருந்த அதிபர் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அட்டர்னி ஜெனலர்களை நீக்கிவிட்டு தனக்கு சார்பானவர்களை நியமிப்பது இயல்வான நடவடிக்கை. அந்த வகையில் பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட 93 அட்டர்னி ஜெனரல்களையும் நீக்கி அ திபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு வழக்கறிஞர் இருப்பார், அந்த வகையில் 94 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டரம்ப் வெற்றி பெற்றார் எனத் தெரிந்தவுடனே ஏராளமான அட்டர்னி ஜெனரல்கள் தாமாகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு மசோதா: இந்தியா சந்திக்கும் சவால்கள் என்ன?