×
 

என்னை பகைச்சுக்கிட்டா சிறை தான்... மிரட்டல் விடுக்கும் டிரம்ப்!!

என்னை பகைத்து கொள்பவர்கள் சிறை தண்டனை அனுப்பிக்க கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டி இருப்பது விவாதமாகியுள்ளது.

அண்மையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல அதிரடிகளை காட்டி வருகிறார். அமெரிக்கர்களுக்கு முக்கியவத்துவம் தரும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது பிற நாடுகளுடனான உறவை கேள்விக்குறியாக்கியுள்ளது. டிரம்பின் சில நடவடிக்கைகளை அமெரிக்க குடிமக்களே எதிர்த்து வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதாவது அதிபர் டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து சில நீதிபதிகளையும், அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் வேலையை விட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் ஜோ பைடன் ஆட்சியில் பொறுப்பேற்றவர்கள் அவரை டிரம்ப் அடியோடு அனுப்பி வைத்துள்ளார். மேலும் நீதிபதிகளுக்கு எச்சரிக்கை விடும் நடவடிக்கையிலும் டிரம்ப் ஈடுபட்டுள்ளார் என்றே சொல்லப்படுகிறது. அதாவது நீங்கள் என்னை தவறாக சித்தரித்தது தான் என் மீதான இமேஜ் டேமேஜ் ஆக காரணம் என நினைக்கும் டிரம்ப், நீதிபதிகளை ஆட்டிப்படைத்து வருகிறாராம். 

இதையும் படிங்க: #BREAKING: முடிவுக்கு வரும் உக்ரைன் ரத்தக்களரி..  மாஸ்கோவுக்கு தூதுவர்களை அனுப்பும் ட்ரம்ப்..

2020ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க பொதுத்தேர்தல் மிகப்பெரிய அவமானம். அந்த மோசடி தேர்தல் மீது விசாரணை நடத்தி அவர்களை சிறைக்கு அனுப்பவே மக்கள் தன்னை 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுத்ததாக டிரம்ப் பேசி இருக்கார்கல் மேலும், நீதிபதிகள், அரசு தரப்பு அதிகாரிகளை நேரடியாக எச்சரித்தும் இருக்கிறார்.

இதனால் பைடன் தலைமையிலான ஆட்சியின் போது பொறுப்பில் இருந்தவர்களை டிரம்ப் பழிவாங்க பார்க்கிறாரோ, அதன் வெளிபாடு தான் இந்த எச்சரிக்கையா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு எதிர்கட்சி தலைவர்கள் பேசும்போது, டிரம்ப் பகை உணர்வுடன் செயல்பட்டு ஆணவமாக நடந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'எலான் மஸ்க்குடன் உடலுறவு கொள்வது... புழு துளைக்குள் செல்லாமல் இருப்பது..! காரித்துப்பிய டிரம்பின் எக்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share