கூரியர் மூலம் போதை மாத்திரை..? 710 போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல்.. கம்பி எண்ணும் வாலிபர்..!
சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், ஒரு வாலிபரை கைது அவரிடம் இருந்து 1.08 கிலோ கஞ்சா, 710 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைபழக்கம் மக்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. எதிர்கால இளைஞர் சமுதாயம் இவ்வாறாக போதைப் பழக்கங்களில் உழன்று வருவதால், நாட்டின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்பதை உற்று நோக்க வேண்டி உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு ஆகியவற்றை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திடீர் மற்றும் அதிரடி ஆய்வு நடத்தி கடத்தல்காரர்களையும், போதை கும்பல்களையும் கைது செய்து வருகின்றனர்.
அதிலும் தற்போது எல்லாம், படிக்கும் மாணவர்களே கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அதிகம் அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் சமீபத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எல்லாம் வட இந்தியாவில் இருந்து கஞ்சாவை வரவைத்து, தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது. ரயில் மூலமெ அதிகமாக இந்த கடத்தல் நடைபெறுவதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: சிறுமியின் வாக்குமூலம் கசிந்த விவகாரம்.. பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு..!
இதையடுத்து ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் உதவியுடன் தமிழக போலீசார் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நடமாட்டங்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ரயில் நிலையங்களில் இருந்து வெளியே வருவதற்கு முன்பே கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில் இதேபோல் வடமாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் போதைப்பொருள்களை வரவழைத்து விற்பனையில் ஈடுபடுவது போலீசாரின் விசாரணையில் தற்போது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தரமணியில் ஒரு வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1.08 கிலோ கஞ்சா, 710 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை தரமணி ரயில் நிலையம் அருகில் வாலிபர் ஒருவர் போதைப் பொருட்களை விற்பதாக தரமணி காவல்நிலைய போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து அவர் கையில் இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது பையில் 750 போதை மத்திரைகள் மற்றும் 1.08கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து போலிசார் போதைமாத்திரைகள், மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வேளச்சேரியை சேர்ந்த வினோத்குமார் என்பது தெரிந்தது. 33 வயதான வினோத் குமார், சூரத் பகுதியில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, மாணவர்களை குறிவைத்து தரமணி பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் அவரை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வேலையில்லை என்ற HR... தீக்குளித்த பெண் பரபரப்பு வாக்குமூலம்!!