வங்கியில் நகை அடகு வைக்கப்போறீங்களா? - பேங்க் மேனேஜர் பார்த்த உள்ளடி வேலை...!
தனியார் வங்கியில் போலி நகை, வங்கி கிளை மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கையில் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.5.21 லட்சம் மோசடி செய்த தேசிய வங்கி கிளை மேலாளர் உட்பட மூவர் மீது மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பாங்க் ஆப் மகாராஷ்ட்ரா தேசிய வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கிளை மேலாளராக ராமலெட்சுமியும், நகை மதிபீட்டாளராக சீதாலெட்சுமியும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சீதாலெட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் இயங்கும் தனியார் வங்கியை தொடர்பு கொண்டு, ‘தங்களது வங்கியில் ராஜேந்திரன் என்பவர் 12 சவரன் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினார். ஆனால் அந்த நகைகளை திருப்ப முடியவில்லை.
வட்டியுடன் சேர்த்து ரூ.5.21 லட்சம் செலுத்தி நகைகளை திருப்பி, உங்கள் வங்கியில் அடகு வைத்து கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நகைகளை திருப்ப தனியார் வங்கி மேலாளர் ரவி ராஜகம்பீரத்தில் உள்ள தேசிய வங்கிக்கு சென்றார். அங்கு நகைகளின் தரம் குறித்து வங்கி மேலாளர் ராமலெட்சுமி கேட்டுள்ளார். அவர் தரமாக இருப்பதாக கூறியுள்ளார்.
இதை நம்பி நகைகளை திருப்பி, தங்களது வங்கி நகை மதிப்பீட்டாளர் யுவஸ்ரீ என்பவர் சரிபார்த்தபோது அந்த நகை போலி என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: கோடை காலத்தில் சூதானம் மக்களே... ஜூஸ் கடைகளில் அதிரடி ரெய்டு... குப்பைக்குப் போன 200 கிலோ பழங்கள்...!
இதையடுத்து தனியார் வங்கி மேலாளர் ரவி அளித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸார் நகைகளை அடகு வைத்த ராஜேந்திரன் மற்றும் தேசிய வங்கி நகை மதிப்பீட்டாளர் சீதாலெட்சுமி, மேலாளர் ராமலெட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தூக்கி வீசப்பட்ட நாற்காலி... பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே அடிதடி... கட்டிப்புரளாத கொடுமையாக நடந்த கலாட்டா...!