×
 

விடாது துரத்தும் நிலநடுக்கம்! நேபாளத்தில் குலுங்கிய கட்டடங்கள்..! அரண்டு போன மக்கள்..!

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மியான்மர் நாட்டை அடுத்தடுத்துன் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் புரட்டிப்போட்டன. மியான்மர் நாட்டு மக்களின் நிலை கவலைக்கிடத்தில் உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் சீட்டுக் கட்டுகள் போல அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்த நிகழ்வுகள் காண்போரை அச்சமடைய செய்தது. வழிபாட்டு தலங்கள், வீடுகள் என எண்ணற்ற கட்டடங்கள் நிலநடுக்கத்தால் உருக்குலைந்தன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

குறிப்பாக தலைநகர் நேபிடா, மண்டலாய் உட்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,000-த்தை கடந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல! வேற வேலைய பாருங்க! டெல்லியில் பட்டாசுக்கான தடை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு...

இந்த நிலையில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்காகோட் பகுதியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதோடு வீட்டில் இருந்த பொருட்களும் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சேதம் குறைந்த விபரங்கள் இதுவும் வெளியிடப்படவில்லை. நேபாளத்தை பொருத்தவரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது இதற்கான காரணம் என்ன என்றால் நீ மானம் என்பது டெக்டோனிக் ஜோனில் அமைந்துள்ளது தான். இதனால்தான் அடிக்கடி நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

​​​​​

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், டெல்லியை ஒட்டி உள்ள பகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தின் சில பகுதிகளிலும் எதிரொளித்துள்ளது. மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மியான்மர் நாடு ஏற்கெனவே உருக்குலைந்த நிலையில், தொடர்ந்து பல இடங்களில் ஏற்படும் நிலநடுக்கத்தால் செய்வதறியாது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதேபோல், பப்புவா நியூ கினியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் என்ன நடக்கிறது.?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share