×
 

சினிமா வசனம், வெட்டி பேச்சு.. திறனற்ற பொம்மை முதல்வர்.. காவலர் கொலையில் இபிஎஸ் கண்டனம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் Political Stunt-களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் Jurisdiction-ல் இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40). கடந்த 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது, உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் நேற்று அதாவது மார்ச் 27ம் தேதி தனது பணி முடிந்தவுடன் உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன் பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அங்கே ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த பொன்வண்டு  என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  அங்கு சென்று மது அருந்திய காவலர் முத்துக்குமார், கஞ்சா வியாபாரி பொன்வண்டுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

இதை நண்பர்கள் முன் தனக்கு ஏற்பட்ட அவமானமாக பொன்வண்டு கருதியதாக கூறப்படுகிறாது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் இருந்து வெளியேறி வந்த முத்துக்குமார், கள்ளப்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் தகராறு.. காவலர் கல்லால் தாக்கி கொலை.. கஞ்சா வியாபாரிகளுக்கு வலை..!

ஆனால், அந்த தகராறில் ஆத்திரமடைந்த பொன்வண்டு, நண்பர்கள் சிலருடன் முத்துக்குமாரை பின் தொடர்ந்து வந்துள்ளார். தோட்டத்திற்கு அருகில் வந்ததும், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முத்துக்குமாரை கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். மேலும், காவலர் முத்துக்குமாருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ராஜாராமும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறி இருப்பதாவது; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லாத மாடல் தான் ஸ்டாலின் மாடல். மக்களுக்கும், மக்களைக் காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி என்பது செயலற்ற வெறும் பொம்மை ஆட்சியே! தங்கள் பணிகளை செய்யும் காவல்துறையினரின் பாதுகாப்பு பறிபோவதற்கு காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சினிமா வசனம் மற்றும் வெட்டி பேச்சு பேசும்  நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரும் முழு பொறுப்பேற்க வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே- இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் செய்யும் Political Stunt-களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் Jurisdiction-ல் இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள்! காவலர் முத்துக்குமார் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் , அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் , உரிய நிதி  உதவியும் வழங்கிட ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் தகராறு.. காவலர் கல்லால் தாக்கி கொலை.. கஞ்சா வியாபாரிகளுக்கு வலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share